பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வீடியோ; நயன்தாரா போல இருப்பதாக ரசிகர்கள் கம்மெண்ட்

நயன்தாரா ஆடிய பாட்டுக்கு காவ்யா அறிவுமணியும் அவரைப் போலவே ரியாக்‌ஷன் கொடுத்து டான்ஸ் ஆடியதைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர் 'நயன்தாரா மாதிரியே இருக்கியேமா' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நயன்தாரா ஆடிய பாட்டுக்கு காவ்யா அறிவுமணியும் அவரைப் போலவே ரியாக்‌ஷன் கொடுத்து டான்ஸ் ஆடியதைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர் 'நயன்தாரா மாதிரியே இருக்கியேமா' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
pandian stores actress kavya arivumani, kavya arivumani dance, kavya arivumani video, fans comments kavya arivumani dancing like Nayanthara, பாண்டியன் ஸ்டோர்ஸ், நடிகை காவ்யா அறிவுமணி, காவ்யா அறிவுமணி, நயன்தாரா போல இருப்பதாக ரசிகர்கள் கம்மெண்ட், Nayanthara, kavya arivumani instagaram

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் நயன்தாரா போல இருப்பதாக கம்மெண்ட் செய்துள்ளார்கள்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தமிழ் தொலைக்காட்சிகளில் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை காவ்யா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா தான் முல்லையாக நடித்து வந்தார். சித்ராவின் மரணத்துக்குப் பிறகு, காவ்யா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரசிகர்கள் காவ்யா அறிவுமணியை, முல்லை கதாபாத்திரத்தில் ஏற்கத் தயங்கினாலும் பிறகு அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

நடிகை காவ்யா அறிவுமணி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வீடியோ என்று வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில், காவ்யா அறிவுமணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது காவ்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் டான்ஸ் வீடியோ ரசிகர்களையும் நேட்டிசன்களையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், திருநாள் படத்தில் நயன்தாரா பாவாடை தாவணியில் இருப்பது போல காவ்யா தாவணியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

நயன்தாரா ஆடிய பாட்டுக்கு காவ்யா அறிவுமணியும் அவரைப் போலவே ரியாக்‌ஷன் கொடுத்து டான்ஸ் ஆடியதைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர் 'நயன்தாரா மாதிரியே இருக்கியேமா' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pandian Stores Kathir Mullai Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: