scorecardresearch

சீரியலில் மட்டும் தான் ஹோம்லி… மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை லாவண்யா

சீரியலில் சேலையில் தோன்றினாலும் மாடர்ன் உடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Pandian Stores Lavanya
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை லாவண்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியல் இந்தியாவில் பல மொழிகள் மட்டுமல்லாமல் இலங்கை மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த சீரியலில் முல்லையாக நடித்து முக்கியத்துவம் பெற்றவர் வி.ஜே.சித்ரா.

திடீரென அவர் இறந்ததை தொடர்ந்து நடிகை காவியா முல்லையாக நடித்து வந்தார். சமீபத்தில் அவரும் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார். 

சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்துள்ள லாவண்யா, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் லாவண்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

மேலும் சீரியலில் சேலையில் தோன்றினாலும் மாடர்ன் உடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா சிறந்த போட்டோஜெனிக் உட்பட பல விருதுகளை வென்றுள்ள லாவன்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக கலக்கி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pandian stores actress laavanya recent clicks photo gallery