பாக்கியராஜ் கையில் குழந்தையாக… இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை தெரிகிறதா?

pandian stores actress Sujitha News : சுஜிதா 2012ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார்

பாண்டியன் ஸ்ட்ரோஸ் தொடரில் ‘தனம்’ கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா, 80களில் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த முந்தானை முடிச்சு திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம்  ஊர்வசி சினிமா உலகில் நடிகையாக  அறிமுகமானார்.

அந்தப் படத்தில், பாக்கியராஜ் ஒரு கைக்குழந்தையுடன் கிரமாத்தில் இருக்கும் ஒற்றைப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக பணி புரிவார். அக்கிராமத்தில், குறும்பு தன்மை கொண்ட பஞ்சாயத்து தலைவரின் மகளாக ஊர்வசியின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். மனைவியை இழந்து தன் கைகுழந்தையுடன் வாழும் பாக்கியராஜ் மீது ஊர்வசி காதல் வயப்படுவாள்.  இறுதியில், இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?  என்பதுதான் படத்தின் கதை. இதில், அந்த கைகுழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பட்டையைக் கிளப்பும்  தனம் என்பது கூடுதல் தகவல்.


சுஜிதா மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மணி தாயின் பெயர் ராதா.  சுஜிதா 2012ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கணவருக்காக,  திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி,மைதிலி,  விளக்கு வச்ச நேரத்திலை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores actress sujitha debuted as child artist in mundhanai mudichu movie vaathiyar son

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com