பிரசாந்த் சொன்னபடி கஸ்தூரிக்கு போன் செய்யும் மல்லி உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும் ஐஸ்வர்யாவையும் கூட்டிட்டு வாங்க என சொல்கிறாள். இதை பார்த்துக்கொண்டிருக்கும் முல்லை என்ன விஷயம் என என கேட்க, கஸ்தூரி அத்தாச்சி வரட்டும். எல்லாரையும் வச்சே சொல்றேன் என கூறுகிறாள்.
இதற்கிடையே தனத்துக்கு ஏழாவது மாசம் இருக்கு என இனியாவிடம் கூறும், பாக்யா தனத்திற்கு போன் போட்டு பேசுகிறாள். வழக்கமான அப்போது தனம், மதுரையில் முல்லை அக்கா வீட்டில் இருப்பதாக சொல்கிறாள். அதை கேட்ட பாக்யாவும் மதுரையில் இருப்பதாக கூறுகிறாள். அதை கேட்ட தனம் அப்போ இங்க கிளம்பி வாங்க, எல்லாரையும் பார்த்துட்டு போகலாம் என தனம் கூப்பிடுகிறாள்.
இது குறித்து பாக்யா அனைவரிடமும் கூறும்போது, கோபி இது நல்ல சந்தர்ப்பம். எல்லாரையும் அங்க பேக் பண்ணி அனுப்பிட்டா, ராதிகா வீட்டு கிரஹபிரேவசத்துக்கு போகாமல் தப்பிச்சுடலாம் என யோசிக்கிறான். ஆனால் இதற்கு ஈஸ்வரி வேண்டாம் என சொல்ல, பாக்யா ஆசைப்படுறா நம்ம போய் பார்த்துட்டு வந்துடலாம் என கோபி சொல்கிறான்.
அதன்பின்னர் தனம் மல்லிகாவிடம் உன்னை கேட்காம, பாக்யா குடும்பத்தை வர சொல்லிருக்கேன். எதுவும் தப்பா நினைச்சுக்காத என கூறுகிறாள். அதற்கு மல்லிகா நம்ம பெரியப்பா பேமிலி தானா, சொந்தகாரங்க கூட நீ என்னை சேர்த்து வச்சதுக்கு உனக்கு நான் நன்றிதான் சொல்லணும் என சொல்கிறாள். அப்போது பாக்யா குடும்பம் அங்கு வர, அனைவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகின்றனர். அப்போது மல்லியிடம் ஈஸ்வரி பிரஷாந்த் பத்தி பேச, மல்லி என்னோட சித்தி. என் அப்பா இறந்ததுக்கு அப்புறம் இவுங்கதான் எனக்கு எல்லாம் என சொல்கிறான் பிரசாந்த்.
அதன்பிறகு பிரசாந்த் கண்ணனிடம் பேச வரும் போது, நீங்க என்னை வந்ததுல இருந்து ஓவரா பண்றீங்க. நான் யார்கிட்ட பேசுனா உங்களுக்கு என்ன? என கேட்கிறான். அப்போது அங்கு வரும் எழில், என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் என கேட்கிறான். பிரசாந்த் நான்தான் ஐஸ்வர்யாவை லவ் பண்றேன். இப்ப ஐசு இங்கதான் வந்துட்டு இருக்கு என சொல்கிறான்.
அப்போது எழில், பிரெண்டா தான பேசுறேன் கண்ணன் சொல்றான். அப்புறம் ஏன் கோபப்படுறீங்க என கேட்கிறான். கோபம்லாம் இல்லை. நான் சும்மா நம்ம கண்ணனை கலாய்ச்சுட்டு இருந்தேன் என சொல்லிவிட்டு எழிலை அழைத்து கொண்டு செல்கிறான். அதன்பிறகு அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, தனம் ஈஸ்வரியை நீங்க அவசியம் குன்னக்குடிக்கு வரணும். அத்தை ரொம்ப சந்தோஷப்படுவாங்க என சொல்கிறாள் அதற்கு ஈஸ்வரி, வீடு ரொம்ப சின்னதா இருக்குமாம்ல. ஏற்கனவே கோபி சொன்னானே என்கிறாள்.
இதற்கு நக்கலாக பதில் சொல்லும் மல்லியும் அவர்கள் கார் வாங்கியது ரோட்டில் தள்ளி கொண்டு போனதை பற்றி கிண்டலாக சொல்கிறாள். அனைவர் முன்னிலையிலும் மூர்த்தி குடும்பத்தை கஞ்சம் என சொல்கிறாள். அதற்கு முல்லை அமைதியாக இருக்க சொல்லியும், எல்லாரும் நம்ம சொந்தகாரங்க தான என கூறுகிறாள். இதற்கு தனம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil