விஜய் டிவி-யின் டபுள் டமாக்கா..! இப்போ ’பாண்டியஸ் ஸ்டோர்ஸ்’ல ’பாரதி கண்ணம்மா’ இருக்காங்க

டூ வீலரில் கதிரை பின்னால் அமர வைத்து பொருட்களை தானே டெலிவரி செய்கிறான் பாரதி.

டூ வீலரில் கதிரை பின்னால் அமர வைத்து பொருட்களை தானே டெலிவரி செய்கிறான் பாரதி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pandian Stores Bharathi Kannamma

Pandian Stores Bharathi Kannamma

Pandian Stores - Bharathi Kannamma: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த வாரம் முழுக்க மீனாவின் கர்ப்பத்தை மையமாக வைத்து கதை நகர்ந்தது.

Advertisment

டாப் 10 டிவி தொகுப்பாளினிகள் இவர்கள் தான்! உங்க ஃபேவரிட் யாரு?

பெரிய வில்லத்தங்கள் ஏதும் இல்லாததால், இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸின் கதை எப்படி செல்லும் என யோசித்துக் கொண்டிருந்தார்கள் பார்வையாளர்கள். ஆனால் விஜய் டிவியோ அதற்கு புதிய  வழியைக் கண்டுப் பிடித்துள்ளது.  இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸுடன், பாரதி கண்ணம்மா சீரியலையும் இணைத்து ஒளிபரப்புகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் பாரதி கண்ணம்மாவை எப்படி கனெக்ட் செய்திருக்கிறார்கள் தெரியுமா. கதிர் டெலிவரி செய்ய இரு சக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருக்கிறான். மெடிக்கல் கேம்பிற்காக பாரதி தன் மனைவி மற்றும் தம்பி, தம்பியின் மனைவி ஆகியோருடன் குன்னக்குடி வருகிறான். காரை ஓட்டி வரும் அகில் எதிர்பாராத விதமாக  கதிர் மீது மோதி விடுகிறான். இதனால் கீழே விழுந்த கதிருக்கு கையில் காயம் ஏற்படுகிறது. தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு, பாரதி அவனுக்கு சிகிச்சையளிக்கிறான். பின்னர் டூ வீலரில் கதிரை பின்னால் அமர வைத்து பொருட்களை தானே டெலிவரி செய்கிறான் பாரதி. கடைசியாக கதிரை விட்டுச் செல்ல அவன் வீட்டுக்கு வருகிறார்கள்.

Advertisment
Advertisements

7000 திரைகளில் அதிரும் தர்பார்! தலைவர் ‘கெரியரில்’ நிலைத்து நிற்கும் படம்…

அதற்குள் பதறியடித்து மூர்த்தியும், ஜீவாவும் வீட்டுக்கு வருகிறார்கள். புக் பண்ணியிருந்த ஓட்டலில் தற்போது அறைகள் இல்லை என அகிலுக்கு ஃபோன் வருகிறது. மூர்த்தி குடும்பத்தினர் பல இடங்களில் விசாரிக்கின்றனர், ஆனாலும் ரூம் கிடைக்கவில்லை. சரி இங்கேயே தங்குங்கள் என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கூற, அதற்கு அகிலின் மனைவியை தவிர அனைவரும் சம்மதிக்கிறார்கள். பின்னர் அவர்களுக்காக சமைத்து, உணவு பறிமாறுகிறாள் முல்லை. தனமும், மீனாவும் கோயிலுக்கு சென்று இன்னும் திரும்பவில்லை.

இந்த இரண்டு சீரியல்களும் 1 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: