விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கயல் குழந்தை விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா – மீனா தம்பதியின் மகள் கயல் கேரக்டரில் நடித்து வரும் குழந்தைக்கும் ரசிகர்கள் உள்ளனர்.
ஹாசினி என்ற இந்த குழந்தை கயல் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இந்த கேரக்டருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையைதான் நடிக்க வைத்ததாகவும், அந்த குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளார். அதனால் அந்த குழந்தை மாற்றப்பட்டு அதனாபிறகுதான் கயல் கேரக்டரில் ஹாசினி நடிக்க வந்துள்ளார். குறுகிய காலத்திலேய தனக்கென ஹாசினி ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீரியல் நட்சத்திரங்களும் ஹாசினியின் ஃபேனாக மாறிவிட்டனர். அவ்வப்போது ஹாசினியுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் நடிகைகள் வெளியிட்டு வரும் நிலையில், தற்போது ஹாசினி சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஹாசினியின் அம்மா ஹாசினி விலக உள்ளது உண்மைதான். அவருக்கு பதிலாக அவரது அக்கா நடிக்க உள்ளார் என்று கூறியுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது கயல் கேரக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சீரியல் முடிவுக்கு வருமா அல்லது கதை வேறு திசைக்கு பயணித்து தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. மேலும் தற்போது கண்ணனுக்காக கதிர் ஜெயிலுக்கு போயுள்ள நிலையில், பேங்க் ஆபீசர்களிடம் கண்ணன் மன்னிப்பு கேட்டு கதிரை வெளியில் கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”