பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா, விஜய் டிவியின் ’ஸ்டார்ட் மியூஸிக்’ என்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு புதன் கிழமை அதிகாலை ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் எனவும், சித்ராவின் கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சண்டையிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தற்போது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சித்ராவின் மறைவுக்குப் பின், அவரது ரசிகர்கள் சித்ரா பற்றி பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சித்ரா தளபதி விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில்"தனது திருமணத்துக்கு விஜய்யை அழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நடிகர் விஜய்யை இதுவரை சந்திக்காமல் இருக்கிறேன்"என்று சித்ரா தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்யைப் பற்றி குறிப்பிட்ட அவர், " பொதுவாக 25 வயது வரைக்கும் தான் இளமை இருக்கும் சொல்வாங்க. ஆனா, நடிகர் விஜய்க்கு வயசாக இளமை பொங்குதுதான் நாங்க சொல்வோம். விஜயின் டிரசிங்க பார்த்து இன்னும் நிறைய பேர் விஜய் மாறி சுத்திட்டு இருக்குங்கா" என்று தெரிவித்தார்.