pandian stores chitra vanitha vijayakumar vj chitra : சின்னத்திரை நடிகை சித்ரா படபிடிப்பை முடித்து விட்டு, நேற்று முன் தினம் அதிகாலையில் தற்கொலை செய்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisment
நசரத்பேட்டையிலுள்ள ஓட்டலில் தனது வருங்கால கணவர் ஹேம்நாத் ரவியுடன் தங்கியிருந்த அவர், பட்டுச்சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.ஈ.வி.பி கார்டனில் விஜய் டிவியின் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த சித்ரா இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டதால், அவர் மன அழுத்தத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை என அவரது சக நடிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் சித்ராவின் கன்னத்தில் காயங்கள் இருந்தது, சந்தேகத்தை கிளப்பியது.
சித்ராவும் ஹேமந்தும் 2 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துக் கொண்டது தெரிய வந்தது. இதனால் அவரின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர் தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்தார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சித்ராவின் தற்கொலை குரித்து சின்னத்திரை வட்டாரங்கள் பலர் பல வீடியோக்களை வெளியிட்டும், சமூக ஊடங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் சித்ரா உடன் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
Advertisment
Advertisements
"இந்த வருடம் நான் கேட்ட மிக அதிர்ச்சிகரமான செய்தி இதுதான். சித்ரா, என்ன ஆனது? கடந்த வாரம்தான் அவர் விருந்தினராகப் பங்கேற்ற 'கலக்கப் போவது யாரு' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தேன். மிகவும் உற்சாகமான, துணிச்சலான, அழகான, மகிழ்ச்சியான பெண். அவர் ரேஷ்மாவை ஞாபகப்படுத்துவதாக அவரிடம் சொன்னேன்.
தற்கொலை ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னவோ சந்தேகமாக இருக்கிறது. சம்பவத்தன்று ஸ்டார் மியூஸிக் நிகழ்ச்சிப் படப்பிடிப்பில் இருந்தார். பக்கத்தில் இருந்த 'கலக்கப் போவது யாரு' அரங்கில் அதே நேரத்தில் நானும் படப்பிடிப்பில் இருந்தேன். இருவரும் இரவு 2.30 மணியளவில் ஒரே நேரத்தில் கிளம்பினோம். அவர் தனது ஓட்டல் அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா?
என்னவோ தவறாக இருக்கிறது, எனக்குச் சரியெனத் தோன்றவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் கண்முன்னே அவ்வளவு உயிர்ப்புடன் இருந்தார்". என பல் விஷ்யங்களை பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமில்லை, சித்ரா வனிதாவிடம் இறால் பிரியாணி கேட்டது என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news