Advertisment

மீண்டும் இணைந்த ஜீவா - மீனா : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 முக்கிய அப்டேட்; டி.ஆர்.பி எகிறுமோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வந்த வசந்த வசி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முதல் பாகத்தில் நடித்த நடிகர் வெங்கட் களமிறங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pandian Stores Serial, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஜீவா மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வந்த நடிகர் வசந்த் வசி தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக முதல் சீசனில் ஜீவா கேரக்டரில் நடித்த நடிகர் வெங்கட் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது ஒரு சகோதரர்களின் கதை என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 5 வருடங்களா ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அக்டோபர் 28-ந் தேதி முடிவுக்கு வந்தது.

முதல் சீசன் அதற்கு சில வாரத்திற்கு முன்பே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்திற்கான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதே சமயம் முதல் சீசன் சகோதரர்களின் கதை என்று ஒளிபரப்பான நிலையில், 2-வது சீசன் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை போல் பலத்த வரவேற்பு இல்லை என்றாலும், 2-ம் பாகம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டாலின் முத்து, நிரோஷா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், ராஜ்குமார், வசந்த வசி, ஹேமா ராஜ்குமார், ஆகாஷ் பிரேம்குமார், அஜய் ரத்னம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அப்பா மகன்களுக்கு இடையிலான மோதல், பாசம், கூட்டு குடும்பத்தின் அவசியம், காதல், என அடுத்து வரும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் இந்த சீரியலில் செந்தில் கேரக்டரில் நடித்து வந்த நடிகரு வசந்த் வசி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

இதனிடையே வசந்த வசி கேரக்டரில் அடுத்து நடிகர் வெங்கட் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில், ஜீவா கேரக்டரில் நடித்திருந்த வெங்கட் தற்போது இந்த சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிக்க உள்ளார். அதே சமயம் முதல் பாகத்தில் மீனா கேரக்டரில் நடித்து வந்த ஹேமா ராஜ்குமார் 2-ம் பாகத்திலும் மீனா கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் மூலம் முதல் பாகத்தில் இணைந்த ஜீவா மீனா ஜோடி தற்போது 2-வது பாகத்தில் இணைந்துள்ளது.

முதல் பாகத்தில் ஜீவா மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது 2-வது பாகத்தில் செந்தில் மீனா ஜோடியாக இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின் கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வந்த வெங்கட், அந்த சீரியல் முடிவுக்கு வந்ததால் தற்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகத்தில் களமிறங்கியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment