pandian stores jeeva family : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் தொடர்கள் வரிசையில் ஒளிபரப்பாகி கொண்டு இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான்.
Advertisment
இந்த சீரியலில் நான்கு சகோதரர்களில் ஒருவராக வருபவர் ஜீவா. அந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் வெங்கட்டை விரட்டி விரட்டிக் காதலிப்பார் ஹேமா. சீரியலில் காதலிக்கத் தயங்குபவராக நடித்த வெங்கட், நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
Advertisment
Advertisements
ஜீவா பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர்.விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு சேனல்களில் புகுந்த வீடு, ஆண்பாவம், தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.
வெங்கட் -க்கு சன் மியூசிக்கில் ஏகப்பட்ட ரசிகர்கள்.பின்பு, திடீரென்று ஆங்கரிங் விட்டு விலகி நடிக்க தொடங்கினார். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா என்றால் தெரியாதவர்களே இல்லை.
இவரின் திருமணம் காதல் திருமணம். கோயம்புத்தூரில் தன்னுடன் படித்த அஜந்தாவை வெங்கட் கரம் பிடித்தார். இவர்களுக்கு அழகான மகளும் இருக்கிறார். வெங்கட் - அஜந்தா தல, தளபதி ரசிகர்களாம். எப்போதும் இதை வைத்து வீட்டில் சண்டை போட்டு கொள்வார்களாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news