ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகையை மாற்றுவது குறித்து குறிப்பிடுகையில், லவ் பண்ணது வைஷாலிய, கல்யாணம் பண்ணது விஜே தீபிகாவை, வாழ்க்கை நடத்துறது சாய் காயத்ரியோட, இது என்ன நியாயம் கண்ணன் சார் என்று நெட்டிசன்கள் ஜாலியாக கேட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகையை மாற்றுவது குறித்து குறிப்பிடுகையில், லவ் பண்ணது வைஷாலிய, கல்யாணம் பண்ணது விஜே தீபிகாவை, வாழ்க்கை நடத்துறது சாய் காயத்ரியோட, இது என்ன நியாயம் கண்ணன் சார் என்று நெட்டிசன்கள் ஜாலியாக கேட்டு கலாய்த்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி தம்பி கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். இதனால், லவ் பண்ணது ஒரு பொண்ண, கல்யாணம் பண்ணது ஒரு பொண்ண, வாழ்க்கை நடத்துறது வேற ஒரு பொண்ணோட இது என்ன நியாயம் கண்ணன் சார் என்று நேட்டிசன்கள் ஜாலியாக கேட்டு கலாய்த்து வருகின்றனர்.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டுகுடும்பமாக வசிக்கும் அண்ணன் தம்பிகளின் பாசக் கதையை அடிப்படையாகக் கொண்டது. கூட்டுக் குடும்பத்தில் உள்ள நன்மைகளையும் உறவுகளுக்கு இடையே நடைபெறும் உரசல்களையும் காட்டுகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற மளிகைக்கடையின் மூலம் அறியப்படும் 4 அண்ணன் தம்பிகள், குட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள். உலக மயமாக்கல், நகரமயமாக்கல், தொழில் மயமாக்கல் ஆகியவற்றால் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்ட தமிழ்ச் சமூகத்துக்கு கூட்டுக் குடும்பத்தின் பிணைப்பை சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கடைக்குட்டி தம்பியான கண்ணன், அண்ணன்களுக்கு தெரியாமல் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்கிறான். இதனால் கோபம் அடையும் குடும்பத்தினர் அவரை வீட்டில் சேர்க்காமல் விரட்டி விடுகின்றனர். இந்த சூழலில்தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளின் அம்மா இறந்துவிடுகிறார். கடந்த சில எபிசோடுகள், கண்ணன் - ஐஸ்வர்யா பாத்திரங்களை மையமாக வைத்தே சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
Advertisment
Advertisements
கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாகக்க் கொண்டு எடுக்கப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், நடிகர்கள், ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி தம்பி கண்ணனுக்கு ஜோடியன ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை விஜே தீபிகா மாற்றப்பட்டுள்ளார். இப்படி, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாற்றப்படுவது இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாகும்.
இந்த தொடரில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிகை வைஷாலி நடித்து வந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு விஜே தீபீக வந்தார். தற்போது, தீபிகா வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடிக்கிறார். இதனால், நெட்டிசன்கள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகையை மாற்றுவது குறித்து குறிப்பிடுகையில், லவ் பண்ணது வைஷாலிய, கல்யாணம் பண்ணது விஜே தீபிகாவை, வாழ்க்கை நடத்துறது சாய் காயத்ரியோட, இது என்ன நியாயம் கண்ணன் சார் என்று நேட்டிசன்கள் ஜாலியாக கேட்டு கலாய்த்து வருகின்றனர்.
சில நெட்டிசன்கள், கண்ணன் கதாபாத்திரத்திற்கு சாய் காயத்ரி நிச்சயம் செட் ஆக மாட்டார். அவர் கண்ணனுக்கு அக்கா போல இருப்பார் என்று அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"