Advertisment

வீடியோ கேம்ஸ் பைத்தியம்: கணவரை கையும் களவுமாக பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

உள்ளே கேமுக்கு ஆதரவாக பேசிவிட்டு அன்பாக்ஸ் முடிந்தவுடன் வெளியில் வரும் ஹேமா அவ்வளவுதான் கணவரை கையும் களவுமாக பிடிச்சாச்சு என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ கேம்ஸ் பைத்தியம்: கணவரை கையும் களவுமாக பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கூட்டு குடு்ம்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைக்கும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்துள்ளது. ஸ்டாலின் முத்து. சுஜிதா தனுஷ், காவியா அறிவுமணி. வெங்கட், குமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடரில் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.

Advertisment

இந்த தொடரில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவரது கேரக்டர் வில்லியா அல்லது நல்லவரா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் அழகு சாதனை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் பியூட்டி டிப்ஸ் என வீடியோ வெளியிட்டு வருகிறார். அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. தனது கணவர் சதீஷ் கேம் விளையாடுவதற்கு அடிமையாகிவிட்டதாகவும், தற்போது இந்தியாவில் கிடைக்காத கேம் ஒன்றை வெளிநாட்டில் உள்ள தனது நண்பர் மூலமாக வாங்கிய கணவரை கையும் களவுமான பிடிக்க போவது போல் இந்த வீடியோ தொடங்குகிறது.

தற்போது ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி மூலம் பலர் தங்களது பணத்தை இழந்து வரும் நிலையில், கேம் சாதனங்கள் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது. இதனால் இதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹேமா தனது கணவரை எதற்க்கா கேம் விளையாடி அதற்கு அடிடையாகிறீர்கள் என கேட்பார் என்று பார்த்தால் இறுதியில் இந்த கேம் பற்றி எனக்கு ஏன் சொல்லித்தரவில்லை என்று கேட்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல், கணவர் புதிய கேம் வாங்கியதை கையும் களவுமாக பிடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பியவர் ரசிகர்களுக்கு அந்த கேமிக் அன்பாக்ஸ் வீடியோவை காட்டியுள்ளார். இதில் உங்களுக்கு யாருக்காவது இந்த கேம் வேண்டும் என்றால் கீழே கமெண்ட் பண்ணுங்க என்று அவரது கணவர் விளம்பரப்படுத்துகிறார்.

உள்ளே கேமுக்கு ஆதரவாக பேசிவிட்டு அன்பாக்ஸ் முடிந்தவுடன் வெளியில் வரும் ஹெமா அவ்வளவுதான் கணவரை கையும் களவுமான பிடிச்சாச்சு என்று சொல்லிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment