மாசமா இருக்குற மீனாவுக்கு இதே வேலையா போச்சு… பழம் சாப்பிட்டா புளிக்குதாம்!

மீனாவுக்கு இருக்கும் அந்த அல்ப குணம் அடிக்கடி எட்டி பார்க்கும்.

pandian stores serial meena pandian stores
pandian stores serial meena pandian stores

pandian stores meena pandian stores serial : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சினிமா பார்த்து அலத்து போன கதை என்றாலும் மக்களுக்கு பிடித்திருக்கிறது. 3 மருமகள்கள் 4 அண்ணன் தம்பிகள் என கூட்டு குடும்பமாக வாழும் இந்த சீரியலின் கதை தினம் தினம் நல்ல ஒரு பொழுதுப்போக்கு ரகம் தான்.

pandian stores meena : மீனாவுக்கு இதே வேலை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இளைய மருமகளான மீனா நாளுக்கு நாள் அனைவரிடமும் பாசமும் அன்பும் காட்டி வருகிறார். இவர் மீது குடும்பத்தினருக்கும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட தொடங்கி விட்டது. மீனாவுக்கும் எல்லார் மீது பாசமும் வந்து விட்டது. ஆரம்பத்தில் பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் பல பிரச்சனைகள் மீனாவுக்கு ஏற்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக மீனாவின் மாமியர் அவரை வெறுத்து ஒதுக்கினார்.

ஆனால் இப்போது அவரிடமே நல்ல மருமகள், செல்ல மருமகள் என பெயர் வாங்கி விட்டார் மீனா. முல்லைக்கு அப்புறம் மீனாவுக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நல்ல பெயர் . இதற்கிடையில் மீனா கர்ப்பமான செய்தி மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லை, மீனாவை அனைவரும் பத்திரமாக சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறார்கள். இருந்த போதும் மீனாவுக்கு இருக்கும் அந்த அல்ப குணம் அடிக்கடி எட்டி பார்க்கும். அப்படி தான், மாமியார் வீட்டுக்கு முல்லையுடன் கதிர் சென்றிருக்கிறார். லேட்டானதால்,அங்கேயே தங்க நேரிடுகிறது. அதனை, தனது அண்ணனிடம் சொல்லிருக்கிறார்.

இதை, தனது மனைவி தனத்திடம் மூர்த்தி சொல்ல, உடனே மீனா மைண்ட்ஸ் வாய்ஸில் முனுமுனுக்கிறார். மூர்த்தி என்னன்னு கேட்க, சமாளிக்க தெரியாமல் பழம், புளிக்குதுன்னு மீனா உலறுவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால்,என்ன செய்வது மீனா சாப்பிடும் பழம் அவர் அப்பாவே பார்த்து பார்த்து வாங்கியதாம். உடனே மீனா வழக்கம் போல் பிறந்த வீட்டை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். “பழம் புளிக்கல புளிக்கல”

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores meena pandian stores serial meena vijay tv pandian stores hotstar

Next Story
மீரா மிதுனுடன் செம்ம சண்டை: விஜய், சூர்யாவுக்காக களம் இறங்கிய நடிகைactress meera mithun, bigg boss celebrity meera mithun, meera mithun criticise vijay and surya, மீரா மிதுன், விஜய், சூர்யா, சனம் ஷெட்டி வீடியோ, மீரா மிதுன் விஜய் சூர்யா மீது விமர்சனம், சனம் ஷெட்டி மீரா மிதுனுக்கு பதிலடி, vijay and surya fans criticise meera mithun, sanam shetty video released against vijay, actress sanam shetty video support to vijay, tamil cinema news, latest tamil cinema news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com