/tamil-ie/media/media_files/uploads/2019/11/Pandian-Stores-Mullai-Kathir.jpg)
vijaytv serial pandian stores kathir mullai
Pandian Stores : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நல்ல ரசிகர் பலத்தைக் கொண்டுள்ளது.
தவறான புரிதலால் முல்லை கோபித்துக் கொண்டு, பிறந்த வீட்டிற்கு சென்று விடுகிறாள். அவளாகத் தானே ’போறேன்’ என்று போனாள் என கதிரும் விட்டு விடுகிறான். ஆனால் அந்த பிரிவை இருவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முல்லையின் பிறந்தநாள் வருகிறது. அவளை நேரில் வாழ்த்தலாம் என பிறந்தநாள் பரிசோட அவள் வீட்டுக்கு செல்கிறான் கதிர். ஆனால் அவளோ அப்பாவுடன் பிறந்த வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.
முல்லையின் அம்மாவும், அவள் வீட்டிற்கு சென்ற விஷயத்தை கதிரிடம் சொல்லாமல் விட, அங்கும் அவன் முல்லையை தவறாக புரிந்துக் கொள்கிறான். வீட்டில் அனைவரும் முல்லையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட தயாராகிறார்கள். கதிருக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். முல்லையை காண முடியாத வெறுப்பில் இரவு லேட்டாக வீட்டுக்கு வருகிறான். அங்கு முல்லை காத்துக் கொண்டிருக்க, முதலில் மன பிரம்மை போலத் தோன்றுகிறது.
பின்னர் நிதர்சனத்தைப் புரிந்துக் கொண்டு, ”இன்னைக்கு எப்படியாவது 12 மணிக்குள்ள எப்படியாச்சும் விஷ் பண்ணிடணும்ன்னு” நினைத்துக் கொள்கிறான். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த முல்லையை எழுப்பி, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கிறான். அவன் வாழ்த்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த முல்லைக்கு கதிரின் வாழ்த்து மகிழ்ச்சியை வரவழைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.