பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் மற்றொரு விஜய் டிவி சீரியலான பாரதி கண்ணம்மாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வருபவர் குமரன். டான்ஸ்ரான குமரன் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு தனது நடனத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் குமரன் கலந்துக் கொண்டு நடனமாடினார். சில ஆண்டுகளுக்கு முன் சீரியலில் இவருக்கு ஜோடியாக இருந்த சித்ராவுடன் சேர்ந்து ஜோடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பின்னர் தனது மனைவி சுஹாசினியுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அடக்கமான தம்பியாக நடித்து வருகிறார். மேலும், திருமணத்திற்கு பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி, வெற்றி பெற்றவராக இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அண்ணன்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் மூர்த்தி. தங்க இடம் தேடி அலைகிறார் கண்ணன். இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்றுள்ள, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை பாடுகிறார் குமரன். நல்ல டான்ஸரான குமரன் இவ்வளவு அழகாக பாடுவாரா? என திறமை வியந்து பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil