சினனத்திரை சீரியல்களில் முக்கியமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம் கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட பல முக்கிய தேவைகளை வலியுறுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பானி வருகிறது.
ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், வெங்கட், குமரன், சரவண விக்ரம், ஹேமா ராஜ்குமார், சாய் காயத்ரி உள்ளிட்ட பல நடித்து வரும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பட்டையை கிளப்பியது. தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக கதிர் மனைவி முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் அரங்கேறி வருகிறது. இதற்காக மூர்த்தி தனம் கண்ணன் ஐஸ்வர்யா ஆகியோர் கொடைக்கானல் சென்றுள்ள நிலையில், ஜீவா கடையை பார்த்துக்கொண்டு மீனாவுடன் வீட்டில் இருக்கிறார். அதேபோல் கதிர் தனது ஹோட்டலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
மகாசங்கமம் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் முழுவதுமாக கதை நகர வாய்ப்புள்ளது. இதனிடையே இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் குமரன் நடிகை கீர்த்தி சுரேஷூடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக குமரன் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் இளமையாகவும் அழகாகவும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குமரன் நடிகை கீர்த்தி சுரேஷூடன் இணைந்து நடிக்க உள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், மற்றும் தசரா ஆகிய படஙகளில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil