scorecardresearch

தூள் பண்றியே தல… விஜய் மாதிரியே ஸ்டெப் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் விஜய் மாதிரியே ஸ்டெப் போட்டு செமையாக டான்ஸ் ஆடியுள்ளார்.

pandian stores serial, pandian stores actor venkat, pandian stores actor venkat dancing like vijay, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட், வெங்கட் வாத்தி கமிங் பாடலுக்கு டான்ஸ், வாத்தி கமிங், மாஸ்டர், விஜய், venkat dacing for Vaathi coming song, master movie, vijay tv, pandian stores, actor venkat dance viral video

பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மாஸ் பாடலான ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு மாஸாக விஜய் மாதிரியே ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடி கலக்கியிருக்கிறார். வெங்கட் ஆடிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், தூள் பண்றியே தல என்று பாராட்டி கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்போது அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. இந்த சீரியலில் 4 சகோதரர்களில் 2வது சகோதரன் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் வெங்கட் ரெங்கநாதன். வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அருமையாக நடித்து வருகிறார். வெங்கட் சமீபத்தில், விஜய் டெலிவிஷன் விருது பெற்றார். வெங்கட் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், வெங்கட், நடிகர் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கமிங்…’ பாடலுக்கு விஜய் மாதிரியே மாஸாக டான்ஸ் ஆடிய விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடல் சமீபத்தில்தான் 150 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது. வாத்தி கமிங் பாடலுக்கு சாந்தனு உள்ளிட்ட நடிகர்கள் நடனம் ஆடியிருந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்டும் விஜய் மாதிரியே ஸ்டெப் போட்டு செமையாக டான்ஸ் ஆடியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வாத்தி கமிங் பாடலுக்கு வெங்கட் ஆடிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், தூள் பண்றியே தல என்று பாராட்டி கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

அதே போல, வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பவருடன் சேர்ந்து வாத்தி கமிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pandian stores serial actor venkat dancing like vijay for vaathi coming song of master movie

Best of Express