scorecardresearch

அடித்தது ஜாக்பாட்… கதை நாயகனா ஜீவா… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்வாரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் 4 சகோதரர்களில் ஒருவராக நடித்து வெங்கட் ரங்கநாதனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Paandian Stores Jeeva
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட் ரங்கநாதன்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வெங்கட் ரங்கநாதன் தற்போது கிழக்கு வாசல் என்ற சீரியலில் லீடு ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் வெங்கட் ரங்கநாதன். தொடர்ந்து ஆண்பாவம், புகுந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, ரோஜா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் 4 சகோதரர்களில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த தொடரில் இருக்காக தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதனிடையே சின்னத்திரையில் மீண்டும் சீரியல் தயாரிப்பு பணியை தொடங்கியள்ள நடிகை ராதிகா சரத்குமார் அடுத்து கிழக்கு வாசல் என்ற சீரியலை தயாரித்து நடிக்க உள்ளார். இந்த சீரியலில் பழம்பெரும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நிலையில். லீடு ரோலில் நடிக்க நடிகர் வெங்கட் ரங்கநாதன் தேர்வாகியுள்ளார்.

ஏற்கனவே இந்த கேரக்டரில் நடிக்க திருமதி செல்வம் நாயகன் சஞ்சீவ் தேர்வான நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியல் ஒளிபரப்பாகும் முன்பே அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வெங்கட் ரங்கநாதன் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வெங்கட் தற்போது புதிய சீரியலில் லீடு ரோலில் நடிக்க உள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pandian stores serial actor venkat ranganathan lead role in kizhakku vasal serial