Advertisment

காலேஜ்ல படிக்கிறப்போ எடுத்த படமாம்..! இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை இன்னுமா தெரியலை?

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்யன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

author-image
WebDesk
Jun 05, 2023 20:57 IST
Pandian Stores

பாண்யன் ஸ்டோர்ஸ்

பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவரின் கல்லூரி கால புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம் பற்றி உணர்த்தும் இந்த சீரியல் தற்போது அதிகம் கடன் வாங்கினால் பின்னால் வரும் விளைவுகள் குறித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் முத்து சுஜிதா தனுஷ், வெங்கட், குமரன், சரவண விக்ரம் ஹேமா ராஜ்குமார், லாவண்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. சகோதரர்கள் 4 பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது ஜீவா தனது மாமனார் வீட்டுக்கும், கண்ணன் தனது மாமியார் வீட்டுக்கும் சென்றுவிட்டார். இதில் கடன் தொல்யால் அவதிப்பட்ட கண்ணன் ஐஸ்வர்யா இருவரையும் கதிர் வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டார்.

publive-image

இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா கேரக்டரில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் தற்போது அவர் கட்டி வரும் புதிய வீடு குறித்து தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஹேமா ராஜ்குமார் கல்லூரி படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நிலையில், ரசிகர்கள் பலரும் இவர் ஹேமாதானா என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Serial Acress Hema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment