/indian-express-tamil/media/media_files/g2UkKhjx9qzypw6Ry8Hs.jpg)
விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஏப்ரல் 27-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீசனில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகத்தில் சத்யமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலினுக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுஜிதா. இவர் தந்து அழகான அமைதியான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகம் முடிவடைந்த பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2’ சீரியல் தொடங்கப்பட்டது. இதில், முதல் சீசனில் நடித்த, ஸ்டாலின், ஹேமா மட்டுமே நடித்து வருகிறார்கள். ஆனால், 2-வது சீசன் சீரியலில் நடிக்க நடிகை சுஜிதவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் 3 வளர்ந்த பையன்களுக்கு அம்மாவாக நடிக்க முடியாது என்று சுஜிதா கூறி மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த கதாபாத்திரத்தில், தற்போது நடிகை நிரோஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை சுஜிதாவை ஒரு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில், ஏற்கனவே வடிவுக்கரசி, பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான் உள்ளிட்ட சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொள்ள உள்ளனர். தற்போது நடிகை சுஜிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் இந்த சீசன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.