பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் 9 லட்சம் ரூபாய்க்கு வைர நகை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 9 லட்சம் ரூபாய்க்கு வைர நகை வாங்குகிற அளவுக்கு என்ன ஸ்பெஷல் என்பதையும் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரிய ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதர்களில் சத்தியமூர்த்தியின் முதல் தம்பியான ஜீவாவின் மனைவி மீனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ஹேமா. இந்த சீரியலில் ஹேமா சற்று நகைச்சுவையாகவும் வெடுக்வெடுக் என பேசும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலம் ஆன ஹேமாவை அவருடைய நிஜப் பெயரை மறந்துவிட்டு சீரியல் கதாபாத்திரமான மீனா என்ற பெயரிலேயே ரசிகர்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனர். ஹேமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அந்த அளவுக்கு பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா, நிஜ வாழ்க்கையில் 9 லட்சம் ரூபாய்க்கு வைர நகை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒருவர் உழைத்து சொந்தமாக விலை உயர்ந்த ஒரு பொருள் வாங்கும்போது மிகப் பெரிய சந்தோஷம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். அந்த சந்தோஷத்தை தானும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹேமா ஒரு வைர கம்மல் வாங்குவது தனது வாழ்நாளில் ரொம்ப பெரிய கனவு என்று தெரிவித்துள்ளார். மேலும், தான் கடைக்கு சென்று வைர நகை வாங்கியதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"