Advertisment

க்ளைமேக்ஸ் ஷூட்டிங்; ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் போட்டோஸ்; இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்த மீனா

author-image
WebDesk
New Update
hema

பாண்டியன் ஸ்டோர்ஸ் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் போட்டோஸ்; இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்த மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது கடைசி நாள் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீனாவாக நடித்து வரும் ஹேமா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்த வந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனதில் இடம்பிடிக்க காரணமே அதன் யதார்த்த கதைக்களம் தான். அண்ணன் - தம்பிகளின் பாசப் போராட்டத்தை காட்டும் விதமாக இந்த சீரியல் எடுக்கப்பட்டது. தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் இதுவாகும்.

இந்த சீரியலில் மூத்த அண்ணாக ஸ்டான்லி நடித்தார். அவருக்கு ஜோடியாக சுஜிதா தனுஷ் நடித்தார். இவர்களுடன் வெங்கட், குமரன், சித்ரா, ஹேமா, தீபிகா, சரவணவிக்ரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில் முல்லையாக நடித்த சித்ரா திடீரென மரணமடைந்ததையடுத்து, காவியா அறிவுமணி அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார். திரைப்பட வாய்ப்புகள் காரணமாக காவியா சீரியலை விட்டு விலகியதையடுத்து, லாவண்யா அந்த கேரக்டரில் நடித்தார். பின்னர் தீபிகா சீரியலில் இருந்து சில காலம் விலகியபோது, அந்தக் கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்தார்.

இந்த சீரியலில் ஜீவா கதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக மீனா என்ற கேரக்டரில் நடித்தவர் ஹேமா ராஜ்குமார். எதார்த்தமான குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஹேமா, சீரியலில் மீனா கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில சமயம் வில்லி போல தெரிந்தாலும், உண்மையை உள்ளபடியே பேசும் பெண்ணாக, எதார்த்த வாழ்க்கையில் இருக்கும் குடும்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நடித்திருப்பார். இவரது நடிப்பிற்காக தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சீரியல்களில் நடித்து வருவதோடு சமூக ஊடகங்களிலும் ஹேமா ஆக்டிவாக இருந்து வருகிறார். ஹேமா தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அதில், அன்றாடம் அவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், ஷூட்டிங்கில் நடக்கும் நிகழ்வுகள், அவர் செல்லும் இடங்கள் என அனைத்தையும் வீடியோவாக வெளியிடுவார்.

இந்தநிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவு பெற உள்ளது. இதனையடுத்து ஹேமா கடைசி நாள் சூட்டிங்கில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவுக்கு வரும் நிலையில், அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் சுடச்சுட ரெடியாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

hema Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment