பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை'க்கு சினிமா வாய்ப்பு: யாருடன் நடிக்கிறார்னு பாருங்க!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் எந்தப் படத்தில் எந்தெந்த நடிகர்களுடன் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் எந்தப் படத்தில் எந்தெந்த நடிகர்களுடன் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், யார் வேண்டுமானாலும் சில மணி நேரங்கள் பிரபலங்களாக ஆகிவிடலாம். ஆனாலும், சினிமா நடிகர் நடிகைகளுக்கும் தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் மீது ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் நடிகைகள் என்னதான் தொலைக்காட்சி வழியாக ரசிகர்கள் மத்தியில் சினிமா நட்சத்திரங்களைவிட பிரபலமாக இருந்தாலும் டிவி சீரியல் நடிகர், நடிகைகளுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி சீரியலில் இருந்து பல நடிகைகள் சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.
Advertisment
விஜய் டியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் காவ்யா அறிவுமணி. இதில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாரதி கண்ணம்மா தொடர் டிவி சீரியல் பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
அதே போல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் முல்லை - கதிர் ஜோடிக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாலமே உள்ளது. இந்த சூழலில்தான், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு நடித்த கால்ஸ் திரைப்படம் அவரது மரணத்துக்குப் பிறகு வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதே நேரத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் இடையே சித்ராவுக்கு இருந்த ஆதரவு அவருக்குப் பிறகு அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கு தொடருமா? முல்லை கதா பாத்திரத்தை அதே உணர்வுடன் எந்த நடிகை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தது. அப்போதுதான், நடிகை காவ்யா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார்.
Advertisment
Advertisements
ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணியை முதலில் ஏற்றுக்கொள்ள சிறிது தயங்கினாலும் பிறகு ரசிகர்கள் அவருக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான்,நடிகை காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகை காவ்யா அறிவுமணிக்கு இதற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால், அவருடைய தனிப்பட்ட காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக காவ்யா சமீபத்தில் ஒரு பேட்டியில்கூட கூறியிருந்தார். ஆனால், அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு வந்துள்ளது.
நடிகை காவ்யா அறிவுமணி, இயக்குனர் சக்திவேல் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் பரத், ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கிறார். பெயரிடப்படாத புதிய படத்தில், பரத், வாணி போஜன் உடன் காவ்யா அறிவுமணியும் இணைந்துள்ளார். இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்ட காவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கத் தொடங்கிய சில மாதங்களிலேயே காவ்ய அறிவுமணிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"