சீரியல் நடிகரை மணந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: மகிழ்ச்சி மின்னும் காட்சிகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கவிதா கௌடா வெளியிட்ட திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கல்யாண புகைப்படங்களில் கவிதா கௌடா எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள் ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

pandian stores serial actress kavitha gowda marriage, pandian stores serial, actress kavitha gowda got marriage, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், நடிகை கவிதா கௌடா, நடிகை கவிதா கௌடா திருமணம், kavitha gowda marriage photo gallery, கவிதா கௌடா திருமண புகைப்படம், கவிதா கௌடா சந்தன் குமார் திருமணம், kavitha gowda weds chandan kumar, kavitha gowda got marriage, actress kavitha gowda photo gallery

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவிதா கௌடா கன்னட சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை கவிதா கௌடா திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கவிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் தொலைக்காட்சி சீரியல் பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று முன்னணி சீரியலாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தின் அழகையும் அதில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் காட்டுகிறது. சேர்ந்து வாழும்போது சில சிக்கல்கள் இருந்தாலும் அது மனிதர்களின் கூட்டு பலத்தைக் காட்டுவதாக உள்ளது.

இந்த சீரியலில் 4 அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் பல குடும்பங்களில் தங்களின் சகோதரர்களுக்கு இடையிலான பாசத்தை நினைவூட்டுகிறது. இதனால், இந்த சீரியல் தங்கள் குடும்பக் கதையாக நினைத்து பலரும் பார்வையாளர்களாக இருந்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தமிழில் பிரபலமானதைத் தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்வையாளர்கள் இடையே வரவேற்பைப் பெற்றதைப் போல, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் பிரபலமாகி உள்ளனர். சத்யமூர்த்தி – தனம், கதிர் – முல்லை, ஜீவா – மீனா என இந்த சீரியலின் கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளும் பிரபலமாக உள்ளனர்.

அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கப்பட்டபோது, ஜீவாவின் மனைவி மீனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கவிதா கௌடா. சீரியல் பெரும் வரவேற்பைப் பெற்றபோதும், அவர் இந்த தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். இப்போது அவருடைய கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா நடித்து வருகிறார். ஏன் இப்படி நல்ல சீரியலில் இருந்து விலகினார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தபோது அவர் கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்வதற்காக தொடரில் இருந்து விலகியதாகத் தெரியவந்தது.

கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிதா கௌடா, தற்போது தமிழில் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கன்னட ரீமேக்கான ‘குக் வித் கிறுக்கு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுவருகிறார்.

இந்த நிலையில், நடிகை கவிதா கௌடா, தன்னுடன் சீரியலில் நடித்து வந்த கன்னட சீரியல் நடிகர் சந்தன் குமாரை காதலித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

கவிதா கௌடான் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மகிழ்ச்சி மின்னும் இந்த புகைப்படங்களில் மணப்பெண்ணாக கவிதா கௌடா மேலும் அழகாக மிளிர்கிறார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கவிதா கௌடா வெளியிட்ட திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கல்யாண புகைப்படங்களில் கவிதா கௌடா எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள் ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores serial actress kavitha gowda marriage photo gallery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com