விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணி தான் சீரியலை விட்டு விலக உள்ளதாக வெளியிட்டுள்ள தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டடித்துள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. ஸ்டாலின் முத்து சுஜிதா தனுஷ், காவியா அறிவுமணி, வெங்கட், குமரன், சாய் காயத்ரி உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் சமீபத்தில் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்திருநதது. இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தொடக்கத்தில் பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டாலும் காலப்போக்கில் இவர்களுக்கு இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் வைரலாக பரவியது.
முதலில் விஜே சித்ரா முல்லையாக நடித்து வந்த நிலையில், திடீரென அவர் மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார். இவரும் சித்ரா அளவுக்கு அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாவில்லை.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்கிடெக்ட் படிப்பில் பட்டம் பெற்ற காவிய இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் காவியா அறிவுமணி சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் தற்போது திரைத்துறையில் சில படங்களில் நாயகி மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடிகக ஒப்பந்தமாகியுள்ள காவியா இதனால், தான் சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், வெள்ளித்திரையில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆவலாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil