விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கூட்டுக்குடும்பம், விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை உள்ளிட்ட பல முக்கியத்துவங்கள் நிறைந்த இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்துள்ளது. தமிழில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பெரும் வரவேற்பை பெற்றாலும், அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மாற்றம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. முதலில் முல்லையாக நடித்த சித்ரா மரணத்தை தொடர்ந்து அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி முல்லையாக நடித்திருந்தார். சமீபத்தில் அவரும் விலகியதை தொடர்ந்து தற்போது லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த நடிகை சாய் காய்த்ரி விலகியுள்ளார். இந்த சீரியலில் ஏற்கனவே ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்ததால் நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக வந்த காயத்ரியும் தற்போது விலகியுள்ளார். இதன் மூலம் முல்லை கேரக்டர் போன்று ஐஸ்வர்யா கேரக்டரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.

இதனிடையே தனது விலகல் குறித்து விளக்கம் அளித்துள்ள சாய் காயத்ரி, நான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கேரக்டரின் கதை போக போக சரியாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இது எனகது சினிமா பயணத்திற்கு சரியாக இருக்காது என்று தோன்றியதால் விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து அடுத்த ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil