Advertisment

கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம்: வாழ்க்கையில் முதல்முறை: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வைரல் பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சரண்யா துரோடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Pandian Stores Saranya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வரும் நடிகை சரண்யா தூரோடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், என்ன ஃபங்ஷன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சகோதரத்துவம் மற்றும் கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை எடுத்தரைத்தது. இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து அப்பா மகன்கள் பாசத்தை அடிப்படையாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பை தொடங்கியது. முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ்குமார் ஆகியோர் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

மற்ற நடிகர் நடிகைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு புதிதாக வந்துள்ள நிலையில், இதில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சரண்யா துரோடி. செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், இந்த சீரியல் முடிவுக்கு பின் ஒரு சில சீரியல்கள் லீடு ரோலில் நடித்திருந்தாலும், அவருக்கு கை கொடுக்கவில்லை.

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பின் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வருகிறார் சரண்யா துரோடி. இந்த சீரியலில், இவர் வில்லியா, அல்லது நல்லவரா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், சரண்யா தற்போது சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது வரலட்சுமி விரதம் கடைபிடித்த சரண்யா துரோடி அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவருக்கு திருமணம் ஆனதே ரசிகர்களுக்கு தெரியாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு திருணமாகி 4 வருடங்கள் கடந்துவிட்டதாக அறிவித்திருந்தார். அதே சமயம் அவர் தனது திருமண புகைப்படங்களை இதுவரை வெளியிடாத நிலையில், தற்போது வரலட்சுமி விரத புகைப்படங்களில் மஞ்சள் கயிறு மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Pandian Stores
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment