இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் குரூப் போட்டோ எடுத்த லட்சுமி அம்மா: பாண்டியன் ஸ்டோர்ஸ் சோகம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இறுதிச் சடங்கில் தனது கடைசி காட்சியை நடித்த லட்சுமி அம்மாள் (நடிகை ஷீலா) சீரியலின் ஒட்டுமொத்த குழுவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

pandian stores serial, lakshmi amma actress sheela take group photo with team, vijay tv, pandian stores, விஜய் டிவி, இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் குரூப் போட்டோ, லட்சுமி அம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், நடிகை ஷீலா, lakshmi amma, actress Sheela, vijay tv, last group photo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், மூர்த்தி சகோதரர்களின் தாய் லட்சுமி அம்மாள் கதாபாத்திரம் இறந்துவிடுவதாக காட்சிப் படுத்தியதால், லட்சுமியாக நடித்த நடிகை ஷீலாவுடன் சீரியல் குழுவினர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

உலக மயமாக்கல், நகர மயமாக்கள், நில உடைமைப் பணிகளில் இருந்து தொழில் மயத்தால் உருவான பணிகளை நோக்கிய நகர்வால், தமிழ்ச் சமூகம் கூட்டுக் குடும்பமாக இருந்து தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கிவிட்ட சூழலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற கூட்டுக் குடும்பக் கதை ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகளின் பாசத்தை படமாகக் காட்டுகிறது. அப்பா இறந்துவிட, குடும்பத்தில் மூத்தன் அண்ணன் மூர்த்தி சிறுவர்களான தனது 3 தம்பிகளை வளர்த்து ஆளாக்குகிறார். அம்மா லட்சுமி அம்மாள் சகோதரர்களின் அன்பின் ஆதாரமாக இருக்கிறார். மூத்த அண்ணன், மூர்த்தியின் மனைவி தனம் இன்னொரு அம்மாவாக இருந்து மைத்துணர்களை வளர்க்கிறார். இந்த கூட்டுக்குடும்பத்தின் பாசத்தையும் அதில் உள்ள சின்னச்சின்ன சண்டைகளையும் காட்டுகிறது.

டி.ஆர்.பி-யிலும் முன்னணியில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி சகோதரர்களின் அம்மா லட்சுமி அம்மாள் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிடுகிறார். இந்த சீரியலின் காட்சி ரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார்.

பொதுவாக டிவி சீரியல்களில் ஒரு கதாபாத்திரம் இறப்பதாக கதை அமைந்திருந்தால், அந்த கதாபாத்திரத்தின் புகைப்படத்துக்கு மாலை போட்டு காண்பித்து முடித்துவிடுவார்கள். ஆனால், இந்த சீரியலில், ஒரு இறப்பு சடங்கு எப்படி நடக்கும் என்பதில் இருந்து எல்லாவற்றையும் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கியதில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் தாயாக முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்து வந்த லட்சுமி அம்மாள் கதாபாத்திரம் இறந்துவிட்டதால் இனிமேல் லட்சுமி அம்மால் கதையில் இருக்க மாட்டார். இதனால், லட்சுமி அம்மாவாக நடிகை ஷீலா நடித்த இறுதிச் சட்டங்கு காட்சியுடன் அவருடைய காட்சிகள் நிறைவடைந்ததால், இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில் கடைசியாக சீரியல் குழுவினருடன் குரூப் போட்டோ எடுத்துள்ளார். இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் சோகத்தில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இறுதிச் சடங்கில் தனது கடைசி காட்சியை நடித்த லட்சுமி அம்மாள் (நடிகை ஷீலா) சீரியலின் ஒட்டுமொத்த குழுவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores serial character lakshmi amma actress sheela take group photo with team

Next Story
டான்ஸ்- நடிப்பில் கலக்குபவர் ஆச்சே இவர்… விஜய் டிவி நடிகைக்கு சூப்பரான புது வாய்ப்பு!vijay tv serial actress archana, serial actress archana gets new chance, in new web series, eeramana rojave serial actress archana, actress archana gets chance to act in new web series, விஜய் டிவி, சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு புதிய வாய்ப்பு , ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை அர்ச்சனா, archana, eeramana rojave serial actress
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com