Pandian Stores Episode Update : அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது முருகன் பார்வதி இருவரும் கிளம்புகின்றனர். அதன்பிறகு கயல் அழுவுகிறது என்று கூறி ஜீவா உள்ளே செல்கிறான். இதற்கிடையே சரவணனை அழைக்கும் தனம் சாப்பாடு கொடுத்து கண்ணனிடம் கொடுக்கும்படி சொல்கிறாள். அதை அவன் கொண்டுபோகும்போது அவனை பார்க்கும் மூர்த்தி சந்தேகப்படுகிறான்.
இதற்கிடையே வீட்டில் இருக்கும் கண்ணன் அண்ணனும் அண்ணியும் என்னை ஏத்துக்காம போய்டுவாங்களோனு பயமா இருக்கு ஐசு என்று சொல்கிறான். எங்க அண்ணன் என்மேல இவ்ளோ வெறுப்பு காட்டுறதா என்னால தாங்கிக்கவே முடியல ஐசு என்று சொலகிறான். அதற்கு ஐஸ்வர்யா இந்த நிலைமை மாறவே மாறாதுனு நினைக்காத மாமா உங்க அண்ணனும் அண்ணியும் சீக்கிரம் நம்ம நிலைமையை புரிஞசுப்பாங்க என்று சொல்கிறாள்.
அப்போது அங்கு வரும் சரவணன் அண்ணி கொடுத்து விட்டதாக சொல்லி சாப்பாடு கொடுக்கிறான். அப்போது அவனிடம் அண்ணன் சாப்டாங்களா என்று கேட்கிறான் ஆனால் அவன் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். அதன்பிறகு கண்ணன் அந்த சாப்பாட்டை சாப்பிடுகிறான்.
இதற்கிடையே வீட்டில் தனம் குழந்தை அசைவது பற்றி மூர்த்தியிடம் சொல்கிறாள். அதற்கு மூர்த்தி அனிமேல் நாம் ஜாக்ரதையாக இருக்கனும். டாக்டர் கொடுத்த டேட் நெருங்குது என்று சொல்கிறான். எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் நம்ம குழந்தையை பார்க்க அம்மா இல்லையே என்று சொல்கிறான். நமக்கு குழந்தை பிறக்கறவரைக்குமாவது அம்மா இருந்திருக்கலாம் என்று சொல்றான்.
அதன்பிறகு எல்லா பிரச்சனையும் கண்ணன் விஷயத்தில் இருந்து வந்தது தான். அதற்கு தனம் விடுங்க மாமா அவனபத்தி பேச வேண்டாம் என்று சொல்கிறாள். அவன் இப்படியெல்லாம் ஆகும்னு நினைத்து செய்யலையே ஊர்ல சொல்ர மாதிரி நாமளும் அவனை குற்றம் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவன் எங்க இருந்தாலும் நல்லாருக்கனும் என்று சொல்றாள்.
அப்போது தனம் தம்பிகளை நாமதான் பார்த்துக்னும் தனம் அவங்களுக்கு நம்மளவிட்டா யார் இருக்கா.. இத்தனை நாள் எப்படி அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்த்தோமோ அதேபோல அம்மா இல்லாத குறை தெரியாம பாத்துக்கனும் என்று சொல்கிறான். அதன்பிறகு கண்ணன் சாப்பிட உட்கார்ந்தபோ நான் எந்தரிச்சி போனதுக்கு வருத்தமா இருக்கா என்று கேடகிறான்.
அதற்கு தனம் எதை நினைத்து வருத்தப்படுவது மாமா ஒன்னா ரெண்டா அவன் இப்படி ஒரு சூழ்நிலையில் இருப்பது தான் வருத்தமா இருக்கு என்று சொல்றாள். அதன்பிறகு மூர்த்தி அவன் செய்த்தை இப்பகூட என்னால ஏத்துக்கவே முடியவில்லை என்று சொல்கிறான். அதற்கு தனம் என்ன இருந்தாலும் கண்ணன் நான் வளர்த்த பிள்ளை அவன் என் மகன் தானே மாமா அவன அப்படியெல்லாம் விட்ற முடியாது அதனாலதான் நான் சாப்பாடு கொடுத்துவிட்டேன் என்று சொல்லகிறாள்.
அதன்பிறகு இருவரும் தூங்க செல்கின்றனர். அப்போது தனம் தனம் என்று லக்ஷ்மி அம்மா கூப்பிடுவது போல் குரல் கேட்கிறது. அதற்கு எழுந்து சென்று பார்த்த போது லக்ஷ்மி அம்மா வருகிறார். அப்போது நான் உணக்கு குழந்தை பிறப்பதை பார்க்க வேண்டும் என்றும், இங்க எல்லாரும் அழுதுட்டு இருக்காங்க நீயும் ஆழுதுட்டு இருக்க நான் எங்கயும் போகல இங்கதான் இருக்கேன். எல்லாரையும் பாத்துக்கோனு சொன்ன எல்லாரும் அழாம பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அதன்பிறகு தனம் தூக்கத்தில் இருந்து எந்திரிக்கிறாள் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil