சின்னத்திரை சீரியல்களை போல சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகைகளின் சமூக வலைதள பக்கங்களில் அவர்கள் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருவது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய வேடத்தில் நடித்த காவியா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதில் கதிர் முல்லை இடையிலான ரொமானஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் காவியா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் ஒரு வேதியல் மாற்றம் என்னில் உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே என்று பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் யார் அந்த நபர் என்று கேட்டு வருகின்றனர்.
சீரியல் மட்டுமல்லாமல் காவியா தற்போது மாஸ்டர் மகேந்திரனுடன் இணைந்து ரிபப்பரி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“