/tamil-ie/media/media_files/uploads/2020/09/4d9332e8ee57419f2d62facdc1a22217-21.jpg)
pandian stores serial meena baby vijay tv
pandian stores serial meena baby vijay tv : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சினிமா பார்த்து அலத்து போன கதை என்றாலும் மக்களுக்கு பிடித்திருக்கிறது. 3 மருமகள்கள் 4 அண்ணன் தம்பிகள் என கூட்டு குடும்பமாக வாழும் இந்த சீரியலின் கதை தினம் தினம் நல்ல ஒரு பொழுதுப்போக்கு ரகம் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இளைய மருமகளான மீனா நாளுக்கு நாள் அனைவரிடமும் பாசமும் அன்பும் காட்டி வருகிறார். இவர் மீது குடும்பத்தினருக்கும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட தொடங்கி விட்டது. மீனாவுக்கும் எல்லார் மீது பாசமும் வந்து விட்டது. ஆரம்பத்தில் பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் பல பிரச்சனைகள் மீனாவுக்கு ஏற்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக மீனாவின் மாமியர் அவரை வெறுத்து ஒதுக்கினார்.
ஆனால் இப்போது அவரிடமே நல்ல மருமகள், செல்ல மருமகள் என பெயர் வாங்கி விட்டார் மீனா. முல்லைக்கு அப்புறம் மீனாவுக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நல்ல பெயர் . இதற்கிடையில் மீனா கர்ப்பமான செய்தி மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
#PandianStores இல்லத்துக்கு ஒரு இளவரசி வந்தாச்சு ????????
— Vijay Television (@vijaytelevision) September 16, 2020
அதுமட்டுமில்லை, மீனாவை அனைவரும் பத்திரமாக சந்தோஷமாக பார்த்துக் கொண்டார்கள். மீனாவுக்கு குழந்தை பிறக்க போவதை எண்ணி மொத்த குடும்பமும் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருந்தார்கள். மீனா வளைகாப்புக்கு சிறப்பு விருந்தினர்களும் வந்திருந்தனர்.
இந்த நேரத்தில் தான் மீனாவுக்கு பிரசவ வலி வர அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதற்குள் மீனாவின் குடும்பத்தார், பாண்டியஸ் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒட்டு மொத்தமாக மீனாவுடன் மருத்துவமனை சென்றனர். ஏற்கனவே பெண் குழந்தை பிறந்தாள் பாண்டியம்மா பெயரை தான் வைக்க வேண்டும் என்று ஜீவா சொல்லி கொண்டிருந்தார்.
சொல்லி வைத்தது போல் ஜீவா -மீனா ஜோடிக்கு மகாலட்சுமி போல் இளவரசி வந்து பிறந்தார். இந்த தகவலை விஜய் தொலைக்காட்சியும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. மீனாவுக்கு குழந்தை பிறப்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கொண்டாடலாம் சரி. ஒட்டு மொத்த தமிழ்நாடே கொண்டாடுதே என்ன செய்வது?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.