குழந்தை பிறக்க போவது என்னமோ மீனாவுக்கு தான்... ஆனா தனம் அண்ணி தான் பயங்கர வெயிட்டிங்!

ஆரம்பத்தில் பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் பல பிரச்சனைகள் மீனாவுக்கு

ஆரம்பத்தில் பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் பல பிரச்சனைகள் மீனாவுக்கு

author-image
WebDesk
New Update
pandian stores serial meena pandian stores

pandian stores serial meena pandian stores

pandian stores serial meena pandian stores : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சினிமா பார்த்து அலத்து போன கதை என்றாலும் மக்களுக்கு பிடித்திருக்கிறது. 3 மருமகள்கள் 4 அண்ணன் தம்பிகள் என கூட்டு குடும்பமாக வாழும் இந்த சீரியலின் கதை தினம் தினம் நல்ல ஒரு பொழுதுப்போக்கு ரகம் தான்.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இளைய மருமகளான மீனா நாளுக்கு நாள் அனைவரிடமும் பாசமும் அன்பும் காட்டி வருகிறார். இவர் மீது குடும்பத்தினருக்கும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட தொடங்கி விட்டது. மீனாவுக்கும் எல்லார் மீது பாசமும் வந்து விட்டது. ஆரம்பத்தில் பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் பல பிரச்சனைகள் மீனாவுக்கு ஏற்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக மீனாவின் மாமியர் அவரை வெறுத்து ஒதுக்கினார்.

ஆனால் இப்போது அவரிடமே நல்ல மருமகள், செல்ல மருமகள் என பெயர் வாங்கி விட்டார் மீனா. முல்லைக்கு அப்புறம் மீனாவுக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நல்ல பெயர் . இதற்கிடையில் மீனா கர்ப்பமான செய்தி மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment
Advertisements

அதுமட்டுமில்லை, மீனாவை அனைவரும் பத்திரமாக சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறார்கள். மீனாவுக்கு குழந்தை பிறக்க போவதை எண்ணி மொத்த குடும்பமும் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மீனா வளைகாப்புக்கு தான் எல்லோரும் வெயிட்டிங். இந்த நேரத்தில் மீனா, முல்லை, தனம் அண்ணி சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரம் பார்த்து வயிற்றில் இருக்கும் மீனாவின் குழந்தை உதைக்க அதை மீனா தனம் அண்ணியிடம் கூறுகிறாள். உடனே தனம் அண்ணி பூரிப்பில் குழந்தையிடம் பேசிக் கொடுக்கிறார். அதைப்பார்த்து முல்லையும், மீனாவும் பொறாமை படுகிறார்கள். தனம் அண்ணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. அந்த குறையை தீர்க்கவே முதல் வாரிசாக மீனாவின் குழந்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வர போகிறது. தனம் அண்ணி அதற்கு தான் பயங்கர வெயிட்டிங்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: