Pandian Stores: லட்சுமி அம்மா மரணம்… அழுது துடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
Pandian Stores serial Promo for this week Tamil News: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கான இந்த வார ப்ரொமோ வீடியோ வெளிவந்து உள்ள நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த லட்சுமி அம்மா தற்போது இறந்து கிடக்கிறார். இதனால் மொத்த குடும்பமும் கண்கலங்கி நிற்கிறது.
Pandian Stores serial tamil news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கிய சீரியலாக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளது. தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள கடைக்குட்டி கண்ணன் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியில் அனுப்படுகிறார். எனவே, அவர் தனது காதல் மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் கடின வாழ்க்கை நடத்தி வருகிறார்.
Advertisment
இந்த நேரத்தில் லட்சுமி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இது குடும்பத்தினரிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவே கடந்த வார எபிசோடு முடிகிறது. இந்நிலையில், இந்த வாரத்திற்கான ப்ரொமோ வீடியோ வெளிவந்து உள்ளது. இதில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த லட்சுமி அம்மா தற்போது இறந்து விட்டார் என சொல்லப்படுகிறது.
அம்மா இறந்து கிடப்பதை முதலில் கதிர் தான் பார்க்கிறார். அவருக்கு மூச்சு இல்லை என்பதை பார்த்து ஷாக் ஆகும் அவர் மற்றவர்களையும் அழைக்கிறார். அவர் இறந்த துக்கத்தில் அனைவரும் கண்ணீர் விடுகின்றனர்.
Advertisment
Advertisements
நேற்று வெளியான இந்த ப்ரோமோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை கண் கலங்கவைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil