விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் சுஜிதா, ஸ்டாலின், குமரன், காவ்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா உயிரிழந்ததை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். இந்த நாடகம் கூட்டுக் குடுமபத்தை பற்றியும் அதில் நடக்கும் பிரச்சனைகளை பற்றியும் கதை செல்கிறது. அதில் இன்றைய எபிசோடில்,
கதிரும், ஜீவாவும் கஷ்டபட்டு டெலிவரி செய்வதை பார்த்து மூர்த்தி, உங்களுக்கு கஷ்டமா இருக்கா என கேட்கிறார். அதற்கு இருவரும் ‘எல்லாம் நம்ம கடைக்காக தான அண்ணன்’ என சொல்கிறார்கள். அப்போது கதிரின் மனைவி முல்லை சாப்பாடு கொண்டு வருகிறாள். நீ ஏன்மா சாப்பாடு எடுத்துட்டு வர்ற என மூர்த்தி கேட்க, அதற்கு முல்லை சாப்பிட வர்ற சொல்லி போன் பண்ணா, வர்றேன், வர்றேனு, யாருமே வரலை. டைமும் ஆகிருச்சு அதான் நானே கொண்டு வந்துட்டேன் என சொல்கிறாள்.
மூர்த்தியும், ஜீவாவும் சாப்பிட, குமரேசனும், கதிரும் வியாபாரத்தை கவனித்து கொண்டிருக்கின்றனர். அடுத்தடுத்து நிறைய ஆர்டர் வருவதால் கதிரை சாப்பிட சொல்லிவிட்டு ஜீவா ஆர்டரை டெலிவரி கொடுக்க கிளம்புகிறான். பின்னர் மூர்த்தியும் கிளம்பிய பிறகு, கதிரும் குமரேசனும் சாப்பிட, முல்லை கடையை பார்த்து கொள்கிறாள்.
திரும்பவும் ஆர்டர் வரவும் கதிர் டெலிவரிக்கு செல்கிறான். அவன் திரும்பி வரும் வரை முல்லை கடையிலேயே இருக்கிறாள். கதிர் டெலிவரி முடித்து வந்த பிறகு, குமரேசன் ரெண்டு பேரும் பார்த்துகோங்க நான் வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறான். அப்போது கடையில் கஸ்டமர் யாரும் இல்லாததால், நான் இந்த மாதிரி கடைக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சுல. படிக்கலாமா என முல்லை கேட்கிறாள்.
அடிப்பாவி இங்கையும் புக் எடுத்துட்டு வந்துட்டியா என கேட்கும் கதிரிடம் புக்கை கொடுத்து படிக்க சொல்கிறாள். அப்போது எனக்கு எதுவும் புரியலடி என கதிர் சொல்லும் போது, முல்லை அருகில் அமர்ந்து சொல்லி கொடுக்கிறாள். அப்போது கடைக்கு வரும் கண்ணன், கடைய பார்க்காம ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க கலாய்க்க, கணக்கு பார்த்துட்டு இருந்தோம்டா என சொல்லி சமாளிக்கின்றனர்.
அதன்பிறகு முல்லையை வீட்டில் விட கதிர் பைக்கில் அழைத்து வரும்போது, இடையில் வண்டியை நிப்பாட்டி பேசணும் என சொல்கிறாள் முல்லை. பேச வேண்டும் என வண்டியை நிறுத்தி விட்டு அங்கையும் புக்கை கொடுத்து படிக்க சொல்கிறாள். அப்போது அந்த வழியாக வரும் கஸ்தூரி ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க என கேட்டு, அவர்களுடன் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறாள். இதனால் முல்லை கடுப்பாகிறாள்.
அடுத்தாக கடை வேலை முடிந்த பிறகு அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கின்றனர். அப்போது மூர்த்தி, ‘கதிர் சொன்ன ஐடியா நல்லா போய்ட்டு இருக்கு’ என சொல்கிறான். அப்போது ஜீவா நம்ம கடையை விட்டு போன கஸ்டமர்களை திரும்ப வர வைக்கணும் என சொல்கிறான். அதற்கு மீனா டோர் டெலிவரியை நிப்பாட்ட போறீங்களா என கேட்கிறாள். அதை மட்டும் நிப்பாட்டு கூடாது, வேற ஏதாவது பண்ணனும் என கதிர் சொல்கிறான். அதனுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil