Vijay Tv Pandian Stores Episode Update : விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
கண்ணன் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்றதில் இருந்து பாண்டியன் ஸடேர்ஸ் குடும்பம் ஒருவித சோக நிலையிலே இருந்து வந்த நிலையில், இந்த சோகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக யாரும் எதிர்பாராத நேரத்தில் லட்சுமி அம்மா இறந்து விட்டார். இதனால் மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ள நிலையில், லக்ஷ்மி அம்மதா இறந்த செய்தி அனைவருக்கும் செல்கிறது.
இதற்கிடையே போனை கடையில் வைத்து விட்டு வெளியூர் சென்றுவிட்ட கண்ணனுக்கு யாரும் தகவல் சொல்லாத நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே ஜனார்த்தன் மூலமாக ஐஸ்வர்யா லக்ஷமி அம்மா இறந்த்து குறித்து தெரிந்துகொள்கிறார். அப்போது ஜனார்த்தன் இந்த விஷயத்தை கண்ணனிடமும் சொல்லும்படி சொல்கிறான். ஆனால் ஐஸ்வர்யா கண்ணனின் போன் தன்னிடம் இருப்பதாக சொல்கிறாள். இதனால் கோபப்படும் ஜனார்த்தன் அவனை திட்டிவிட்ட, தான் எப்படியாவது தகவல் சொல்லிவிடுவதாக கூறி ஐஸ்வர்யாவை கடையில் இருந்து கிளம்ப சொல்கிறார்.
லக்ஷ்மி அம்மா இறந்தது குறித்து தெரிந்துகொண்ட ஐஸ்வர்யா, பயத்தில் கதறி கதறி அழுகிறார். மேலும் கண்ணனிடம் எப்படியாவது விஷயத்தை சொல்ல வேண்டும் என துடிக்கிறார். ஒருகட்டத்தில் அழுது மயக்கமடையும் அவர், சற்று நேரத்தில் போன் அடிப்பதை பார்த்து எழுந்திருக்கிறாள். ஆனால் மயக்கத்தில் இருப்பதால் போனை எடுக்க முடியமல் இருக்கிறாள். இதற்கிடையே கண்ணன் லாரியில் கண்ணன் திருச்சி சென்று கொண்டிருக்கிறான்.
கடைக்கு லீவு விடும் ஜனார்த்தன், மூர்த்தி வீட்டிற்கு வந்து மீனா ஜீவாவுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்கிறார். சடங்குக்கு தேவையான வேலையை செய்வோம் சொல்கிறான். மேலும் கண்ணனை திட்டவும் செய்கிறான். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், லட்சுமி அம்மாவின் சொந்தங்கள் எல்லோரும் கண்ணன் திருமணம் செய்தததால் தான் லட்சுமி அம்மா இறந்துவிட்டார் என பேசுகின்றனர். அதனால் மூர்த்திக்கு ஒருபக்கம் கண்ணன் மீது கோபம் தலைக்கு ஏறுகிறது.
முல்லையின் அம்மா மல்லிக்கு தகவல் சொல்கிறாள். இதனிடையே லக்ஷ்மி அம்மாவை பார்க்க மூர்த்தி வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யாவை எல்லோரும் திட்ட, முல்லையின் அம்மா அவளை அடித்து கீஜெ தள்ளுகிறாள். மேலும் ஊரார் முன் அவளை அவமானப்படுத்துகிறாள். ஆனாலும் ஐஸ்வர்யா ஒருமுறை கடைசியாக லட்சுமி அம்மாவை பார்க்க வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்சிகிறார் ஆனால் மீனா உட்பட யாருமே அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ஓரமாக நின்று அழுகிறார். அத்தடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
ஊருக்கு சென்ற கண்ணன் திரும்பி வந்தாலும் வீட்டில் உள்ள சொந்த பந்தங்களை மீறி லக்ஷ்மி அம்மாவை பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே கண்ணன் திருமணம் செய்து கொண்டது குறித்து அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர். தற்போது லக்ஷ்மி அம்மாவும் இறந்துவிட்டதால் அவரது இறப்புக்கு காரணம் கண்ணன்தான் என்று அனைவரும் பேசத்தொடங்கிவிட்டனர். இதனால் கண்ணன் இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ்சுடன் இணைவது கடினம். இதுவரை ஒன்றாக இருந்த பாண்டியன் ஸ்டோர் தற்போது இரண்டாக உடையும் நிலையில் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil