Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்த நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கார் வாங்கி வர சென்றவர்களுக்காக காத்திருக்கும் மீனாவும், தனமும் கண்ணனை வாசலில் போய் பார்க்க சொல்கிறார்கள்.
அதற்கு கதிர் “கார் வந்தால் எப்படியும் ஹாரன் அடிக்க போறாங்க. அப்புறம் ஏன்? வெயிட் பண்ணுங்க அண்ணி” என்று சொல்கிறான்.
இதனிடையே, “கார் வாங்க வரும் மூர்த்தி, ஜீவா, கதிரிடம் வண்டிக்கு சர்வீஸ் எல்லாம் பார்த்து இருக்கேன். அதுக்கே எக்ஸ்ட்ரா 50 ஆயிரம் ரூபாய் ஆகிடுச்சு… அந்த மீதி பணம் நான்கு லட்சத்தோடு, கூட ஒரு 50 ஆயிரம் சேர்த்து கொடுங்க” என கார் விற்பவர் கேட்கிறார்.
இதற்கு , கதிர் “வியாபாரத்துல ஒரே பேச்சா இருக்கணும் அண்ணே. நேத்து ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு இருக்க கூடாது” என்று சொல்கிறான்.
இதையடுத்து கார் விற்பனை செய்பவர், “சும்மாதான் கேட்டு பார்த்தேன். நீங்க நான்கு லட்சமே கொடுங்க…” என சொல்கிறான். இதையடுத்து, மீதி பணத்தை கொடுத்து காரை வாங்குகிறார்கள்.
கார் வாங்கிய பிறகு, கார் பின்னால் யார் பெயரெல்லாம் எழுதலாம் என மகிழ்ச்சியாக பேசி கொண்டு வருகிறார்கள்.
காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். கதிர் நான் உள்ளே போய் எல்லாரையும் கூட்டிட்டு வர்றேன் என சொல்லிவிட்டு வீட்டுக்கு உள்ளெ வருகிறான்.
காருக்காக காத்திருந்த தனம், மீனா, முல்லையிடம் கார் வாங்கலை என பொய் சொல்கிறான். இதைக்கேட்டு கவலைப்படும் தனம், மீனா, முல்லை 3 பேரும் கார் வாங்குவதாகக் கூறிவிட்டு ஏமாற்றுகிறீர்களே என்று வருத்தப்படுகிறார்கள். இதையடுத்து, அவர்கள் வருத்தப்படுவதைப் பார்த்து உள்ளுக்குள் சிரிக்கும் கண்ணன், எல்லோரும் வெளியில் வந்து பாருங்கள் என்று கூறுகிறான். பிறகு, எல்லோரும் கார் வாங்கி வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு தனம், மீனா, முல்லை மூன்று பேரும் எவ்வளவு பெரிய கார் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்கள்.
இதையடுத்து, குடும்பத்துடன் ஒரு ரவுண்டு சென்று வரலாம் என்று காரில் புறப்படுகின்றனர். எல்லோரும் சந்தோஷத்துடன் போகும்போது, திடீரென கார் ஆப் ஆகி நிற்கிறது. எவ்வளவும் முயற்சி செய்தும் ஸ்டார்ட் ஆகாமல் நிற்கிறது. அதன்பிறகு கதிரும், கண்ணனும் வண்டியை தள்ளியும் ஸ்டார்ட் ஆகவில்லை. அனைவரும் வண்டியில் இருந்து கீழே இறங்கிய பிறகு, சுற்றி நிற்பவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள். இதனால் தனம் கோபப்படுகிறாள்.
“நாங்க நடந்து போறோம். நீங்க வண்டியை எடுத்துட்டு வாங்க” என சொல்லி மீனாவையும், முல்லையையும் அழைத்து கொண்டு போகிறாள்.
மூன்று பேரும் சென்ற பிறகு, காரை தள்ளிக்கொண்டு வருகிறார்கள். சத்யமூர்த்தி, ஜீவா, கதிர் மூன்று பேரும் வீட்டிற்கு வந்த பிறகு, அவர்களிடம் தனம், “ரோட்ல எல்லாரும் நம்மளை பார்த்து சிரிச்சாங்க மாமா” என சொல்கிறாள். இந்த காரை எங்க போய் வாங்குனீங்க என தனம் கோபத்துடன் கேட்கிறாள். ஒரு டீலரை பார்த்து வாங்குனதை பற்றி ஜீவா சொல்கிறான்.
தனம் “எவ்வளவு பணம் கொடுத்து வண்டி வாங்குனீங்க” என்று கேட்டதற்கு, “ஐந்து லட்சம் கொடுத்து வண்டி வாங்கியதாக சத்யமூர்த்தி பதில் சொல்கிறான். இதனால் அதிர்ச்சி அடையும் அவர்கள், ஐந்து லட்சம் கொடுத்து எதுக்கு இந்த ஓட்டை வண்டியை வாங்குனீங்க. இந்த அஞ்சு சம்பாரிக்க, நீங்க எத்தனை வருஷம் கஷ்டப்படனும் என தனம் சொல்கிறாள். வண்டியை சரி பண்ணிடலாம் என கதிர் சொல்லும் போது, இதுக்கு மேல இந்த காரை எதுக்கு சரி பண்ணனும். காரை கொடுத்து பணத்தை வாங்கிடலாம் என சத்யமூர்த்தி சொல்கிறான்.
“இப்போ நீங்க பணத்தை திரும்ப கொடுத்துருவானா, 5 லட்சம் போயிருச்சு.. இந்த பணத்தை சம்பாதிக்க நீங்க எல்லோரும் எத்தனை வருஷம் கஷ்டப்படனும் தெரியுமா” என்று தனம் கவலைப்படுகிறாள். “வயித்துல பாப்பாவ வைச்சுக்கிட்டு இப்படி கவலைபடாதீங்க அக்கா” என்று முல்லை சமாதானம் சொல்கிறாள்.
சத்யமூர்த்தி, ஜீவா, கதிர் மூன்று பேரையும் தனமும், மீனாவும் கோபத்துடன் சரமாறியாக கேள்வி கேட்கிறார்கள். அப்போது பணத்தை திரும்ப வாங்கி, வேற நல்ல கார் வாங்கிடலாம் என மூர்த்தி சொல்ல, “வேணாம் சாமி. கார் வாங்குற ஆசையே போச்சு…” என தனம் வெறுப்பாக சொல்கிறாள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. நாளைய எபிசோடில் கார் வாங்கின முதல் நாளே இப்படியாகிடுச்சே. அந்த காரை என்ன செய்வார்கள். புது கார் வாங்குவார்களா? என்று பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“