pandian stores serial vijay tv pandian stores : பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டுக்குடும்ப விரும்பிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு சகோதரர்களைப் பற்றிய கதை தான் இது. தனது 3 தம்பிகளையும், உடல்நிலை சரியில்லாத அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ள வேணாம் என திருமணமான ஆரம்பத்திலேயே தனத்திடம் சொல்லி விடுகிறார் மூர்த்தி. இதை தனமும் ஏற்றுக் கொள்கிறாள்.
மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது.
தற்போது ஜீவாவின் மனைவி மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்து அவர் வீட்டில் சில காலம் இருந்து, காடைச்யில் தனம் உண்டான செய்தி கேட்டு மீண்டும் புகுந்த வீட்டிற்கே வந்து விட்டார். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த ஒற்றுமையை சோதித்து பார்க்கவே, புதிய எண்ட்ரி கொடுத்து இருக்கிறார் மீனாவின் சிங்கப்பூர் அத்தை. இவரின் சூழ்ச்சி வலை தான் அடுத்த 1 மாதம் எபிசோட்.