pandian stores today : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை காதல் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.
Advertisment
விரும்பமே இல்லாமல் கதிரை திருமணம் செய்துக் கொண்டாலும் முல்லைக்கு நாளுக்கு நாள் கதிர் மீது அன்பு ஏற்பட அந்த அன்பு தற்போது காதலாக மாறியுள்ளது. கதிரும் அதே மனநிலையில் தான் இருக்கிறார். இவர்களின் ரொமான்ஸ் பார்ப்பதற்கே க்யூட்டாக இருக்கிறது. ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி மூக்கை விடுவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி தான்.
ஏற்கனவே, முல்லை மோதிரத்தை விற்க போக அது வீட்டில் பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கிறது. முல்லையை தனமும், பெரியவரும் சேர்ந்து திட்ட முல்லைக்கு சாப்பாடு கொடுத்து சமாதானம் செய்கிறார் கதிர். இதற்கிடையில் கதிர் பிறந்த நாள் வீட்டிலேயே கொண்டாடப்படுகிறது.
Advertisment
Advertisements
வெட்கப்பட்டுக் கொண்டே முல்லைக்கு கேக் ஊட்டிவிடுகிறார் கதிர். என்ன ஒரு காதல் காட்சி. கதிருக்கு ஸ்பெஷலாக என்ன சமைக்கலாம் என தனம் கேட்டு, அதற்கு முல்லை பதில் சொல்ல ஆனா அதற்கும் முட்டுக்கட்டு போடுகிறார் தனம், என்னம்மா இது?
Thirumanam today:
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிக்கும் சந்தோஷ் ஜனனியை பார்க்க துடி துடித்து ஓடுகிறார். போலீசாரின் உதவியால் சந்தோஷ் இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்கும் ஜனனி அங்கு செல்கிறார். சுவரில் சந்தோஷ் தனது ரத்தத்தில் ஜனனி ஜனனி என எழுதியிருப்பதை பார்த்து கதறி அழுகிறார்.
இதுவரை சந்தோஷை கடத்தியது யார் என்று தெரியாமல் ஒருபக்கம் ஜனனி அவரது அண்ணன் வினோத் சக்தி ஆகியோர் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். மாயா மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக கடத்தல்காரர்களும் பேசிக் கொள்கிறார். இந்த மர்மத்திற்கு எப்போது கிடைக்கும் பதில்.