பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மனைவி இவ்ளோ பெரிய டான்ஸரா? செம்ம மாஸ் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட், நேற்று மகளிர் தினம் வாழ்த்து தெரிவித்து அவருடைய மனைவியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோவை இஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வெங்கட் தனது மனைவியுடன் செம்ம மாஸாக டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்ச் சமூகம் தனிக் குடும்பங்களாக, அதிலும், பிள்ளைகள் ஒரு பக்கம் போனிலும் பெற்றோர்கள் ஒரு பக்கம் அவரவர் போனிலும் தனித்தனி தீவுகளாக கிடக்கும் இந்த சூழலில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளையும் அதில் வரும் சிக்கல்களையும் கூறி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் திருமணத்துக்குப் பிறகும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். அதோடு, சேர்ந்து உழைத்து முன்னேற வேண்டும் என்று போராடுகின்றனர். இதனிடையே, கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் கும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அண்ணண் தம்பிகள், குடும்ப உறுப்பினர்கள் செய்யும் தியாகங்கள் நெகிழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முதல் தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலிலும் நடித்து வருகிறார்.

நடிகர் வெங்கட் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக செயல்படுபவர். வெங்கட் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் குடும்பத்தினரின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், நடிகர் வெங்கட், நேற்று மகளிர் தினம் வாழ்த்து தெரிவித்து அவருடைய மனைவியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோவை இஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் வெங்கட்டும் அவரது மனைவியும் சேர்ந்து ‘என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீ அன்பே…’ என்ற பாடலுக்கு செம்ம மாஸாக டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை 1 லட்சத்துக்கும் அதிகமனோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட்டின் மனைவி இவ்வளவு பெரிய டான்ஸரா? என்று பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Pandian stores venkat dance with his wife video goes viral

Next Story
7 வருட உழைப்புக்கு வெற்றி: நெகிழ்ந்த அஸ்வின்; சப்போர்ட் செய்த ஷிவாங்கி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com