Pandian Stores Serial: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் முக்கியமான இடத்தில் உள்ளது. வில்லத்தனம் பெரிதாக இல்லாத, வன்முறை இல்லாத மென்மையான கதையோட்டத்தில் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறது.
Advertisment
மீனா கர்ப்பமாகிய விஷயம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் குழந்தை இல்லாமல் இருக்கும் தனத்துக்கு, தானே கர்ப்பமாக இருப்பது போல அத்தனை சந்தோஷம். நேரா நேரத்துக்கு ஜூஸ், சாப்பாடு என மீனாவை கையில் வைத்துத் தாங்குகிறார். கணவரின் அண்ணி இத்தனை அன்பானவராக இருப்பாரா என்று, இந்த சீரியலைப் பார்க்கும் மற்ற பெண்களுக்கே பொறாமை ஏற்படுகிறது.
3 மாதம் ஆகும் வரை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் எனபது தனத்தின் அன்புக் கட்டளை. ஆனால் மீனாவுக்கோ அந்தளவுக்கு பொறுமையில்லை. வீட்டிலிருப்பவர்களிடமாவது சொல்லலாமே என்கிறாள். இனிப்பு செய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு கொடுத்த தனம், மீனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அனைவரிடமும் கூறுகிறார். எங்கள் வீட்டிலும் சொல்லட்டுமா என, மீண்டும் மீனா கேட்க, இப்போதைக்கு வேண்டாம் என்கிறார்.
Advertisment
Advertisements
’உங்க அண்ணிக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லல்ல, அதனால என் மேல பொறாமை படுறாங்க. அதான் என்ன எங்க வீட்ல சொல்ல வேணாங்கறாங்க’ என ஜீவாவிடம் கூறுகிறாள் மீனா. ‘கர்ப்பமாக இருக்கறதால, உன்ன ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு நினைக்காத’ என முறைக்கிறான் ஜீவா. இதற்கிடையே முல்லையும் கதிரும் உள்ளுக்குள்ளேயே அன்பை வைத்துக் கொண்டு, வெளிப்படுத்தத் தெரியாமல் தவிக்கிறார்கள்.
முல்லையை பார்க்க ஆசைப்பட்ட கதிர் அவள் வீடு இருக்கும் தெரு முனை வரை சென்று, ஏதோ ஒரு தயக்கத்தில் வீட்டுக்குப் போகாமல் வழியில் நிற்கிறான். அப்போது முல்லையின் அப்பா கதிரை பார்த்து விட, வீட்டுக்கு அழைக்கிறார். ஆனால் கதிரோ இன்னொரு நாள் வருகிறேன் என மறுத்து விடுகிறான். இதனால் முல்லைக்கும் கதிருக்கும் ஏதோ பிரச்னை இருக்கிறது என புரிந்துக் கொள்கிறார் முல்லையின் அப்பா முருகன்.
சரி எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கதிரின் வீட்டுக்கு வர, அங்கே மீனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தால் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் நடந்துக் கொண்ட விதம், முல்லை கதிரின் பிரச்னையைப் பற்றி குடும்பத்தினருக்கு எதுவும் தெரியவில்லை என்பதை புரிந்துக் கொள்கிறார்.
முல்லையை நினைத்து கதிரும், கதிரை நினைத்து முல்லையும் உள்ளுக்குள் உருகுவது, எப்போது மியூச்சுவலாக தெரியப்படுத்தப்படும் என ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.