pandianstores meena pandian stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டுக்குடும்ப விரும்பிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு சகோதரர்களைப் பற்றிய கதை தான் இது. தனது 3 தம்பிகளையும், உடல்நிலை சரியில்லாத அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ள வேணாம் என திருமணமான ஆரம்பத்திலேயே தனத்திடம் சொல்லி விடுகிறார் மூர்த்தி. இதை தனமும் ஏற்றுக் கொள்கிறாள்.
மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது.
தற்போது ஜீவாவின் மனைவி மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்து அவர் வீட்டில் சில காலம் இருந்து, காடைச்யில் தனம் உண்டான செய்தி கேட்டு மீண்டும் புகுந்த வீட்டிற்கே வந்து விட்டார். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
நமக்கு பிரச்சனை எங்கேர்ந்து வரும்னே சொல்ல முடியல..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் – திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/uVar5Obl8u
— Vijay Television (@vijaytelevision) January 28, 2021
இப்படி அமைதியாய் போய்கொண்டிருக்கும் குடும்பத்தில் கும்மி அடிக்கவே, மீனாவின் சிங்கப்பூர் அத்தை கிளம்பி வந்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது மீனாவின் அப்பாவை விட இவங்க படு மோசம். நல்லா இருக்குற மீனா மனதிலும் விஷத்தை தெளிக்கிறாங்க. அடுப்புக்கு சண்டை, சமையலுக்கு சண்டை, சுடு தண்னீ போட சண்டைன்னு கடைசியில 2 சமையலுக்கு கொடுண்டு வந்து விட்டாங்க. இப்ப தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிதுனு நினைச்சா அதுக்குள்ள இப்ப அடுத்த பிரச்சனை வந்துடுச்சி.