pandianstores serial vijaytv pandian stores episodes
pandianstores serial vijaytv pandian stores episodes : தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மக்கள் மத்தியில் ஒரு சில தொடர்களே நீங்கா இடம் பிடிக்கும்.
Advertisment
அந்த வகையில், மக்களின் மனதில் அதிகம் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பிகளின் பாசப்பினைப்பினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைள் அனைவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதில் ஜீவா – மீனா ஜோடிக்கு குழந்தை உள்ள நிலையில் மூத்த அண்ணன் சத்தியமூர்த்தி தனம் ஜோடிக்கு தற்போது குழந்தை பிறக்க உள்ளது.
இந்த நேரத்தில் தான் பாக்கியா, தனது தொழில் தொடர்பாக கும்பகோணம் செல்ல முடிவு எடுக்கிறார். அப்போது தான் மகா சங்கமம் எபிசோட் தொடங்கியது. அதாவது பாண்டிய ஸ்டோர் உடன், பாக்கியலட்சுமி சீரியலும் சேர்ந்து சங்கமம்.ராதிகா தனது இடத்தை விற்க கும்பகோணம் வருகிறார். அவருடன் கோபியும் துணைக்கு வர, கும்பகோண கோயில் வேண்டுதலுக்காக பாக்கியாவும், இனியாவும் கோயியுடன் வருகிறார்கள். இப்படியே ஒரு வாரம் நகர, அடுத்த ட்விஸ்ட் வந்தது. கோபி- ராதிகா ஒன்றாக வெளியில் போகும் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்து விடுகிறார்.
Advertisment
Advertisements
இது ஒருபுறம் இருக்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடோனை மீனா அப்பாவுக்கு விற்க கோபி ராதிகாவிடம் வற்புறுத்துக்கிறார். இந்த நேரத்தில் தான், ராதிகா விருப்பம் இல்லாமல் கோபி உடன் ரீஜிஸ்டர் ஆஃபிஸ் செல்கிறார். இப்போது தான் ட்விஸ்டே ராதிகா தான் நிலத்தை விற்க வந்தவர் என்பது பாக்கியாவுக்கு தெரிய வர, உடனே மின்னல் வேகத்தில் பாக்கியா மூர்த்திக்கு செய்யும் உதவி தான் இன்றைய எபிசோட். மிஸ் பண்ணிடாதீங்க.