மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் இவரது முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்தான். பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அடுத்த படமே தளபதி விஜய்யுடன் நடிக்க கமிட்டானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. அதில் மலையாளத்தில் வெளியான மாஸ்டர் படத்திற்கு விஜய்டிவியின் பிரபல சீரியல் நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பாசமான அண்ணியாக நடித்து வரும் சுஜித்ரா தான் டப்பிங் பேசியுள்ளார். இவர் கதைகேளு கதைகேளு எனும் யூடியூப் சேனல் ஒன்றை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். இதில் ரீசன்ட்டாக வெளியிட்டிருக்கும் வீடியோவில் மாஸ்டர் பட டப்பிங் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழில் மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்தவர் ரவீனா ரவி. நயன்தாரா, எமி ஜாக்சன், அமலாபால் உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தவர் ரவீனா. இவர் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற ஒரு கிடாரியின் கருணை மனு மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil