/indian-express-tamil/media/media_files/2025/09/10/screenshot-2025-09-10-110650-2025-09-10-11-07-20.jpg)
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்டா குறித்த பிரச்சனை சமூக வலைதளத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து செய்திவாசிப்பாளர் பனிமலர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
’மெஹந்தி சர்கஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனான அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் கலைஞராகவும் உள்ளார். பல திரைப்பிரபலங்களின் இல்ல நிகழ்விற்கு சமையல் செய்து வருகிறார். தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சமையல் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
சமீபகாலமாக மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசல்டா குறித்த பிரச்சனை சமூக வலைதளத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஜாய் கிரிசல்டா,மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரிடம் புகாரளித்திருந்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் பல கேள்விகளையும் எழுப்பியது. மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்டா குறித்து பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்திவாசிப்பாளரான பனிமலர், ஜாய் கிரிசல்டா -மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா பேசிய நேர்காணல் ஒன்றை பார்த்தேன். ஜாய் கிரிசில்டா ஒரு பத்து வருடங்களுக்கு முன்பே விஜய் படத்திற்கு எல்லாம் ஸ்டைலிஸ்டா இருந்திருக்கிறார்கள். இன்னும் பல படங்களுக்கு ஸ்டைலிஸ்டா இருந்திருக்கிறார்கள். நான் ஏன் விஜய் படத்தை சொல்கிறேன் என்றால் எப்போதும் பெரிய ஸ்டார் அதனால் தான்.
ஜாய் கிரிசில்டாவுக்கு பெசன் நகரில் ஒரு பெரிய கடை இருந்தது. ஆடி கார் எல்லாம் வைத்திருந்தார். அவருக்கு என்று எந்த பின்புலமும் இல்லை தன் உழைப்பால் முன்னேறியவர். நான் மீடியாவில் இருந்ததால் அவருடைய வளர்ச்சியை பார்த்திருக்கிறேன்.
தற்போது ஜாய் கிரிசல்டா அனைத்தையும் விட்டுவிட்டதாக ஒரு நேர்காணலில் கூறினார். மாதம்பட்டி ரங்கராஜ் தனது சோறு போட கூட ஆள் இல்லை என்று கூறியதால் ஜாய் கிரிசல்டா தனது வேலையெல்லாம் விட்டு விட்டு மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஷூ துடைத்து கொடுப்பது சட்டை எடுத்து கொடுப்பது, அவர் எங்கு இருந்தாலும் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும் வேலையை செய்துள்ளார்.
நான் என்ன கேட்கிறேன் அம்பானி மனைவியாக இருந்தாலும் அவர் எதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அறைகுறையாக இருக்கும் பிள்ளைகள் தான் இந்த மாதிரி செய்கிறோம். எல்லாருக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு சந்தோஷமான உறவில் இருந்தாலும் கரியரை விடாதீர்கள். வேலையை விடாதீர்கள்.கவலையா இருக்கிறீர்களா நல்லா வேலை பாருங்கள், சந்தோஷமாக இருக்கிறீர்க்ளா நல்லா வேலை பாருங்கள்.
சோகமாக இருக்கும் பொழுது ஒரு கடையில் நன்றாக சாப்பிட்டுவிட்டு பில் கட்ட காசு வேண்டும். பெட்ரோல் போட காசு வேண்டும். எதுக்காக இருந்தாலும் காசு வேண்டும். அப்பா, அம்மா, தம்பி, கணவர் யாருமே பெண் பிள்ளைகளுக்கு நிலைக்கமாட்டார்கள். அதனால் வேலையை மட்டும் விடாதீர்கள்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.