சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாகிறது; வெளியானது ட்ரெய்லர்!

ஒலிம்பிக் போட்டியில், பேட்மிட்டன் விளையாட்டில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியரும் இவர் தான்.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றினை படமாக அளிப்பது அத்தனை எளிதானதாக இருப்பதில்லை. ஓவ்வொருவர் வாழ்விலும் நடந்த நிகழ்வுகளை துளியும் பிசகாமல் அளிப்பதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. தோனி, மேரி கோம் வரிசையில் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாகியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா. சாய்னா போன்று அதிவேகத்தில் அவருடைய விளையாட்டையும் அவருடைய வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டியுள்ளார் பரினிதி சோப்ரா.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக பலரும் அந்த நடிகையை பாராட்டி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில், பேட்மிட்டன் விளையாட்டில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியரும் இவர் தான். உலக தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியரும் சாய்னா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அமோல் குப்தா இயக்கியுள்ளார்.  கடந்த இரண்டு வருடங்களாக இந்த படத்திற்காக தன்னை மெறுகேற்றி வருகிறார் பரிநிதி சோப்ரா. தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது பயிற்சியில் ஈடுபட்டு பேட்மிட்டனை முறையாக  கற்றிருக்கிறார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Parineeti chopra promises to break the great wall of china in her quest for no 1 title

Next Story
விடைபெறும் விஜய் டிவி சீரியல்: ரசிகர்களுக்கு மகிழ்ச்சியா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express