இது கேரள ஸ்பெஷன் வெஜ் ரெசிபி. ஒரு முறை செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
பச்சை பயறு 3 கப்
தேங்காய் 1 கப்
சீரகம் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
2 ஸ்பூன் நெய்
வத்தல் 4
1 கொத்து கருவேப்பிலை
அரை ஸ்பூன் சீரகம்
செய்முறை : பச்சை பயிறை நன்றாக இடித்துகொள்ளவும். வேண்டும் என்றால் மிக்ஸியில் ஒரு முறை மட்டும் அரைத்துகொள்ளலாம். தற்போது இந்த பச்சை பயிறின் தோலை மட்டும் நீக்கும் படி புடைக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீரில் கழுவி. தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து வைத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நீக்கிவிட்டு, பச்சை பயிறை சேர்த்து வேக விடவும். மிக்ஸியில் தேங்காய், சீரகம் அரைத்துகொள்ளவும். இதை வெந்த பயிரில் சேர்த்து கிளரவும். அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம். தொடர்ந்து நெய் சேர்த்து அதில், சீரகம், வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, இந்த பயறில் கொட்டவும். தொடர்ந்து தேங்காய் அரைத்த மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து கிளரவும்.