கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வகையில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர். இங்கே கீழே வரும் வீடியோவோ, உலக இந்திய மக்களின் கலை உழைப்பிற்கு கிடைத்த பரிசாகவே இருக்கிறது. சென்னையை சேர்ந்த எழுத்தாளார் கலைசெல்வி புலியூர் கேசிகன் இந்த பாடலை எழுதியுள்ளார். அவரோ சென்னையில் இருக்கிறார். அவரின் பாடலுக்கு புத்துயிர் தந்தவரோ குருவாயூர் பாக்கியலட்சுமி.
Advertisment
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் மலேசியாவில் வசிக்கும் மதுரா நாட்டிய மாமணி குருவாயூர் உஷா துரை. பாடலுக்கு நடனமாடியவரோ பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட பாரீஸ் லட்சுமி. நடிகை மற்றும் நடன கலைஞரான அவர் தற்போது கேரளாவின் வைக்கத்தில் வசித்து வருகிறார். இந்த வீடியோவை நடிகர் மோகன்லால் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாரீஸ் லட்சுமியின் இந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த பாடல் கொரோனாவின் கோர தாண்டவத்தை விளக்குவதோடு, கொரோனாவுக்கு எதிராக நாம் எப்படியெல்லாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய நடனம் மூலம் விளக்குகிறார் பாரீஸ் லட்சுமி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”