Pariyerum Perumal Review: பரியேறும் பெருமாள் விமர்சனம்- சுழல்கிறது, பா.இரஞ்சித் சாட்டை!

Pa. Ranjith Production ‘Pariyerum Perumal’ Movie Review: பரியேறும் பெருமாள் முழுக்க பா.இரஞ்சித்-மாரி செல்வராஜ் கூட்டணியின் சாட்டை சுழல்கிறது.

Pariyerum Perumal Movie Review: பரியேறும் பெருமாள் விமர்சனம், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ்
Pariyerum Perumal Movie Review: பரியேறும் பெருமாள் விமர்சனம், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ்

Kathir, Anandhi, Yogi Babu Starrer Pariyerum Perumal Movie Review: பரியேறும் பெருமாள்… பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் செப்டம்பர் 28 அன்று வெளியாகியிருக்கும் படம்! கதிர், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் படத்திலேயே துணிச்சலாக கொள்கை சார்ந்த கருத்துகளை ஒலிக்கும் ரஞ்சித், சொந்தமாக எடுக்கும் படத்தில் விட்டு வைப்பாரா? இதுதான் பரியேறும் பெருமாள் மீதிருந்த எதிர்பார்ப்பு! இனி படத்தைப் பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம்!

பா ரஞ்சித் சிறு பட்ஜெட் இயக்குநராக அறிமுகமாகி வெகு குறுகிய காலத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவர்கள் பட்டியலில் முதன்மையானவராக இருப்பார். அவரின் நீலம் புரடக்ஷன் சார்பில் எழுத்தாளர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு போன்றோர்கள் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் பரியேறும் பெருமாள்.

முதலில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மாஸ் மீடியாவுக்குள் கொண்டு வந்ததற்கு! சினிமா பொழுதுபோக்கு சாதனமாக பார்க்கப்பட்ட காலத்திலேயே புரட்சிக் கருத்துக்களை பராசக்தி வடிவில் கண்டு இந்தியாவின் முன்மாதிரியாக இருந்தது தமிழ்சினிமா! அதனை தற்போது சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக இருக்கும் சாதிய அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டி அடுத்த கட்ட நகர்வை நோக்கி தள்ளியிருக்கிறார் தோழர் பா.ரஞ்சித், தயாரிப்பாளராக!

ஒரு சாதிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய இளைஞன் உயர்கல்விக்காக செல்லும் இடத்தில் சந்திக்கும் அனைத்து விதமான நிகழ்வுகளையும், பிரச்சினைகளையும் இயல்பாக படமாக்கியிருக்கும் மாரி செல்வராஜ் இயக்குநராக முதல் படத்திலேயே பர்ஸ்ட் கிளாஸில் பாஸாகிவிட்டார்.

படக்கதை: கதிரின் தந்தைக்கு அவரை ஒரு வக்கீலாக பார்க்க ஆசை. அதனால் ஒடுக்கப்பட்டோர் கோட்டாவில் அவரை சட்டக்கல்லூரிக்கு அனுப்புகிறார். அங்கு மற்றொரு பிரிவு வசதியான ஆனந்தியின் நட்பு கிடைக்கிறது.

பள்ளி இறுதிவரை பெரும்பாலும் சாதியின் கோர முகங்களை கண்டிருக்காத மாணவ சமுதாயம், கல்லூரி வாசலுக்கு செல்லும் போது கலந்து பழகும் மாணவர்களிடையே சாதி அரசியலாக புகுத்தப்படுவது நம் சமூகத்தில் தவிர்க்கமுடியா ஒன்று. அதன் சதியில் கல்லூரி நண்பர்களாக இருக்கும் ஆனந்திக்கு கதிர் மேல் ஏற்படும் காதல், கதிரின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதை இயல்பு மாறாமல் படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குநர்.

கதிர், ஆனந்தி மட்டுமல்ல, படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சினிமா என்பதைத் தாண்டி கதாபாத்திரங்களாகவே வாழ்வது போன்ற தோற்றமளிப்பது இயக்குநரின் திறமையை பளிச்சிட வைக்கிறது. சில இடங்களில் இயல்புக்கு மாறாக சில காட்சிகள் திணிக்கப்படுவது போன்ற தோற்றம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் சொல்ல வந்த கருத்துக்காக சில திணிப்புகள் தேவைப்படுவது தவிர்க்கமுடியாதது.

படத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தவறானவர்களாக உணர்த்தப்படுவது போன்ற உணர்வு ஏற்படாமல் பார்க்க இயக்குநர் தவறிவிட்டார். ஆனாலும் சமூகத்திற்கான நல்ல மெசேஜை கொடுத்த மாரி செல்வராஜை பாராட்டிதான் ஆகவேண்டும். தயாரிப்பாளரான ரஞ்சித்தையும்!

சந்தோஷ் நாராயணன் ரஞ்சித்துக்கும் அவர் படத்திற்கும் பிராண்ட் அம்பாசிடர் போலாகிவிட்டார். இசையும், பாடல்களும் நாட்பேட். எடிட்டிங் பலம் சேர்க்கின்றது. ஒளிப்பதிவாளர் பர்பெக்ட் பர்சன்!

மொத்ததில் படம் சாதிய விழிப்புணர்வா? சாதிய வன்மமா? சாதிய எதிர்ப்பா? எதை பதிவு செய்கிறது என்பதை ரசிகர்களின் உணர்வில்தான் கண்டுக்கொள்ளமுடியும். சினிமா ரசிகர்கள் ஆதரவு 30%, ஆர்டினரி ரசிகர்கள் ஆதரவு 30%, பொதுமக்கள் ஆதரவு 60% இருக்கும் என எதிர்பார்க்கலாம்! படம் முழுக்க, சுழல்கிறது மாரி செல்வராஜ்-பா.ரஞ்சித் கூட்டணியின் சாட்டை!

திராவிட ஜீவா

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pariyerum perumal movie review starring kathir anandhi in lead roles

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com