parthiban award speech actor parthiban oththa seruppu : புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா 2020, இன்று இரவு அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் தொடங்கியது.இதில் கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்பட்டது.
இத்திரைபடத்தின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபனுக்கு மாநில அரசு சார்பில் விருது மற்றும் ஒரு லட்ச ரொக்கப் பரிசுக்கான காசோலையினை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விழாவில் பேசிய பார்த்திபன், தமிழகத்தில் வரப்போகும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என மக்கள் குழம்பி போய் உள்ள நிலையில் நடிகர்களின் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.புதிய கட்சியை நான்கூடத் தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை.
ஏற்கனவே நடிகர்கள் அரியலுக்குள் வந்தபோது சிறப்பான ஆட்சியை கொடுத்து உள்ளனர். அதேபோல் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், இதேபோல் நடிகர்கள் என்பதால் அவர்களை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும் தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என நம்பிக்கை தெரிவித்த அவர், இளைஞர்கள் அனைவருமே அரசியலுக்கு வரவேண்டும் என்பது தனது விருப்பம் என்றார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Parthiban award speech actor parthiban oththa seruppu movie parthiban political
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?