இயக்குனர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து புதிய பாதை படத்தின் மூலம் நடிகராகவும், டைரக்டராகவும் உச்சம் தொட்டவர் ரா. பார்த்திபன். இவரின் முதல் படமே இவருக்கு பல விருதுகள் மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.
இவர் தனது புதிய படமான டீன்ஸ் புரமோஷனுக்காக அளித்த பேட்டி தற்போது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.
பலரும் நமக்கான ஒருவர் இல்லையே என வருத்தப்படுவார்கள். ஆனால் எல்லாம் ஒரு காலம் வரைக்குதான். ஒரு பீக் ரொம்ப நேரமாக அப்படியே இருந்தால் நன்றாக இருக்காது.
ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சென்று மேலும் கீழே வருவார்கள். அதன்பின் மேலே செல்வார்கள். அப்போதுதான் சுவாரஸ்யமாக இருக்கும். இதனால்தான் பிரிவு வருகிறது” என்றார்.
அத்துடன் நிறுத்தாத பார்த்திபன், “கணவன்-மனைவி 7 வருடங்கள்தான் சேர்ந்து வாழ முடியும். இதைதான் கணவன்- மனைவிக்குள் 7 வருட வாழ்க்கை என்று சொல்வார்கள். அதன்பின்னர், ஒரு அரிப்பு வந்துவிடும். அந்த அரிப்பு இருவரும சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பை கொடுக்காது” என்றார்.
தொடர்ந்து, “தாலி எல்லாம் மனதுக்கு கிடையாது. அது கழுத்துக்கு மட்டும்தான். மனசு கடல் மாதிரி” என்றார். மேலும், “எனக்கு தெரிஞ்சு 65 வயதான கணவன்-மனைவியிடம் நடந்த சர்வேயில் இவர்தான் அடுத்த ஜென்மத்திலும் கணவன்- மனைவியாக வாழ்வீர்களா? என்ற கேள்விக்கு பலரும் கையெடுத்து கும்பிட்டுள்ளனர்” என்றார்.
இதையடுத்து, “காதல் என்பது நன்றாக இருக்கும். கணவன்- மனைவியான பின்பு பிரச்னைகள் வரும். கசப்புகள் அதிகமாக இருக்கும். நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வரும்” என்றார்.
இயக்குனர் பார்த்திபனின் இந்தப் பேச்சு இணையத்தில படுவைரலாகிவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“